Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

இந்தியாவின் நிதியாண்டு கணக்கு மாறுகிறது; 150 ஆண்டு நடைமுறை முடிவுக்கு வருகிறது

இந்­தி­யா­வின் நிதி­யாண்டு கணக்கை, ஜன., – டிச., ஆக மாற்­று­வ­தற்கு, மத்­திய அர­சுக்கு, உயர்­மட்­டக் குழு பரிந்­துரை செய்­துள்­ளது.

இந்­தி­யாவை ஆட்சி செய்த ஆங்­கி­லே­யர்­கள், பிரிட்­டன் வழக்­கப்­படி, 1867ல், ஏப்., – மார்ச் நிதி­யாண்டை அறி­மு­கப்­ப­டுத்­தி­னர். இந்­நி­லை­யில், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘நாட்­டின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­திற்கு, குறிப்­பாக, வேளாண் துறை சந்­திக்­கும் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, நிதி­யாண்டை, ஜன., – டிச., ஆக மாற்­று­வது நல்­லது’ என, தெரி­வித்­தது. இது குறித்து ஆராய, முன்­னாள் தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­கர் சங்­கர் ஆச்­சார்யா தலை­மை­யில், உயர்­மட்­டக் குழு அமைக்­கப்­பட்­டது.


இது குறித்து, சங்­கர் ஆச்­சார்யா கூறி­ய­தா­வது: மத்­திய, மாநில அர­சு­களின் நிதி­யாண்டு, ஏப்., – மார்ச் ஆக உள்­ளது. வேளாண் துறை­யில், ஜன., – மார்ச் வரை, ரபி பரு­வம்; ஏப்., – அக்., வரை, கரீப் பரு­வம்; ஜூலை­யில் அறு­வடை துவக்­கம் என்ற நடை­மு­றை­கள் உள்ளன. பங்­குச் சந்­தை­களில், தீபா­வ­ளியை தொடர்ந்து கார்த்­தி­கை­யில் துவங்­கும், ‘சம்­வாட்’ ஆண்டு, நிதி­யாண்­டாக கடை­பி­டிக்­கப்­ப­டு­கிறது.

அவற்­றின் அடிப்­ப­டை­யில், நிதி­யாண்டை மாற்­று­வ­தில் உள்ள சாதக, பாதக அம்­சங்­கள் ஆரா­யப்­பட்­டன. முடி­வில், நிதி­யாண்டை, ஜன., – டிச., ஆக மாற்­று­வ­தில் உள்ள, பல்­வேறு வச­தி­களை கருத்­தில் கொண்டு, அதை செயல்­ப­டுத்த, மத்­திய அர­சி­டம் பரிந்­து­ரைத்து உள்­ளோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மத்­திய அரசு, 150 ஆண்­டு­க­ளாக பின்­பற்றி வரும் நிதி­யாண்டை மாற்­றி­னால், நவம்­ப­ரில் பட்­ஜெட் தாக்­கல் செய்ய வேண்­டி­யி­ருக்­கும். பார்லி., கூட்­டத்­தொ­டர்­க­ளி­லும் மாற்­றம் மேற்­கொள்­ளப்­படும். மத்­திய அரசை பின்­பற்றி, மாநில அர­சு­களும் புதிய நிதி­யாண்டு நடை­மு­றைக்கு மாறும். ம.பி., அரசு, சமீ­பத்­தில், நிதி­யாண்டை, காலண்­டர் ஆண்­டுக்கு மாற்றி, சட்­ட­ச­பை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்றி உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. சீனா, ரஷ்யா, மெக்­சிகோ உள்­ளிட்ட, 156 நாடு­களில், ஜன., – டிச., நிதி­யாண்­டாக கடை­பி­டிக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில்,வேளாண் துறை, 15 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்­ளது. கிரா­மப்­பு­றங்­களில், விவ­சா­யத்தை சார்ந்து, 58 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான குடும்­பங்­கள் உள்ளன. அத­னால், நிதி­யாண்டை மாற்­று­வதே சிறந்­தது. ஜூன் – செப்., இடையே வறட்சி ஏற்­பட்­டால், நவம்­ப­ரில் மத்­திய பட்­ஜெட் தாக்­கல் செய்­யும் போது, நிவா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு, உட­ன­டி­யாக நிதி ஒதுக்­கீடு செய்ய முடி­யும். இது, வேளாண் துறை வளர்ச்­சிக்­கும் உத­வும்.-அசோக் குலாட்டி,பொரு­ளா­தார வல்­லு­னர், வேளாண் துறை

நிதி­யாண்டை மாற்­று­வ­தால், பெரிய மாற்­றம் ஏதும் ஏற்­ப­டாது. பரு­வ­மழை காலத்­தில் கட்­டு­மான தொழில் பாதிக்­கப்­படும். அதை கருத்­தில் கொண்டு, குறித்த காலத்­தில் பட்­ஜெட் தாக்­கல் செய்ய வேண்­டும்.-பிர­ணாப் சென், புள்ளி விபர துறை முன்­னாள் தலை­வர்

No comments:

Post a Comment


web stats

web stats