Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

'நீட்' தேர்வு ரிசல்ட்: தமிழகம் 'அம்போ!'

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன. எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் களோ, தேசிய அளவிலான ரேங்க்கோ பெற முடியாததால், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களும், பிரபல தனியார் பள்ளிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள, மருத்துவக் கல்லுாரி களில், கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி. எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பு களில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. மத்திய அரசின், 15 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே, நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்பட்டது.


கடந்த கல்வியாண்டு மாணவர்களுக்கு, நாடு முழுவதும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மருத்துவக் கல்லுாரியில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து அனுப்பியும், அதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை.

இதனால், மருத்துவப் படிப்பில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்ற நிலை, கடைசி நேரத்தில் உருவானது. அதிர்ச்சி யடைந்த பெற்றோர மற்றும் மாணவர்கள், அவசர அவசரமாக, இத்தேர்வுக்கு தயாராகினர். விண்ணப்பக் கட்டணம், 1,500 ரூபாய் கூட செலுத்த முடியாமல், பல மாணவர்கள் விண் ணப்பிக்க தவறினர்.கடந்த கல்வியாண்டில் 11 லட்சம் பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய நிலையில், 88 ஆயிரம் பேர் மட்டுமே, நீட் தேர்வுக்கு விண்ணப்பித் திருந்தனர். எதிர்பார்த்தது போன்றே, நீட் தேர்வில்,

மத்திய பாடத்திட்டமான, என்.சி.இ. ஆர்.டி., அடிப் படையில், வினாத்தாள் அமைக் கப்பட்டிருந்தது. தமிழக மாணவர்களுக்கு, இத் தேர்வு மிக கடின மானதாக அமைந்து இருந்தது. இதற்கென தனியாக பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்த மாணவர்களும் திணறினர்.


தேர்ச்சி இலக்கு அதிகரிக்கும்


நேற்று மதியம், நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளி யாகின. இவை, தமிழக மாணவர்களுக்கு, அதிர்ச்சி தரும் முடிவாக அமைந்தது. பிளஸ் 2வில், 1,100 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் கூட, நீட் தேர்வில், 110 மதிப்பெண்களைக் கூடத் தாண்டவில்லை.

கடந்த ஆண்டை விட, அதிகமானோர் தேர்வெழுதி யுள்ள நிலையில், கடந்த ஆண்டு, 117 மதிப்பெண் களாக இருந்த தேர்ச்சி இலக்கு, நடப்பு ஆண்டில், 130ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படு கிறது. நீட் தேர்வு பயிற்சிக்காக, கடந்த ஆண்டு முழுவதும் பரபரப்பாக விளம்பரப்படுத்திய பள்ளிகள் கூட, தங்களது தேர்ச்சி முடிவுகளை நேற்று வெளியில் சொல்ல தயங்கின.


உள் ஒதுக்கீடு கிடைக்குமா


குஜராத் மாநிலத்தில், படிப்பவர்களுக்கு உள் ஒதுக் கீடு வழங்கப்படுகிறது. உதாரணமாக, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 200 மாணவர்கள் தேர்வெழுதி, 150பேர் தேர்ச்சி பெற்றும், மாநில பாடத்தில், 800 பேர் தேர்வெழுதி, 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலை உருவானால், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு, 80 சதவீத இட ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடும் வழங்கப் படுகிறது.

இதுபோல், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப,



 'நீட்' தேர்வு ரிசல்ட்: தமிழகம் 'அம்போ!'

உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத் தில் எழுந்துள்ளது. மாணவர் சேர்க்கை குறித்து, தெளிவான அறிவிப்பு வெளியிடாதது, தமிழக அரசின் மீது,பெற்றோர் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.


விண்ணப்பம் எப்போது


சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது

முதல்வர் டில்லி சென்றுள்ளார். 'நீட்' தேர்வில், தமிழகத்துக்கு விலக்கு கோரிய, அவசர சட்டத் துக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க, மத்திய அரசிடம் அவர் வலியுறுத்துவார். வரும், 26ம் தேதி, எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக் கான அறிவிக்கை வௌியிட்டு, 27ம் தேதி முதல், விண்ணப்பம் வினியோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதேபோல், மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத பட்சத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், தமிழக பாட திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதமும், மத்திய பாட திட்ட மாணவர்களுக்கு, 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க ஆலோசிக்கப் பட்டது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

- தினமலர் சிறப்பு நிருபர்-

No comments:

Post a Comment


web stats

web stats