ஏப்ரல் 1ம் தேதி அதாவது நாளை முதல் பி.எஸ்.3 என்று சொல்லக்கூடிய அதிக சுற்றுப்புற மாசு ஏற்படுத்தக்கூடிய வாகனங்களை நம்ம நாட்டில் விற்கவோ, பதிவு செய்யவோ முடியாது. இதன்காரணமாக டூவீலர்கள், கார்கள் என சுமார் 8.5 இலட்சம் வாகனங்கள் மொத்தமா தேங்கிப்போய் இருக்கு..இதுல சுமார் 6.5 இலட்சம் டூவீலர்கள், 2 இலட்சம் கார்கள் அடக்கம். எப்படிப் பார்த்தாலும் இந்த வாகனங்களோட மொத்த மதிப்பு 20 ஆயிரம் கோடியாம்.
மிகப்பெரிய நஷ்டத்தை பத்தி வாகன தயாரிப்பாளர்கள் நீதி மன்றத்தில் முறையிட்டும் அதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி நஷ்டத்தை பார்க்கமுடியாது பொதுமக்களின் நலனையும் இயற்கையின் வளங்களை பார்க்கவேண்டும் என தீர்ப்பு சொல்லிட்டாராம்.. இது மேல்முறையீடு வழக்கின் இறுதி தீர்ப்பு என்பதால் இனி வாகன தயாரிப்பாளர்கள் வேறு நீதிமன்றங்களை நாட முடியாது.
இன்னைக்குள்ள இந்த வண்டிகளை தயாரிப்பாளர்கள் டீலர்கள் மூலம் வித்தாகனும். ஆனா வித்தாலும் பதிவு செய்யறது ரொம்பவே கஷ்டம். இந்த அதிரடி உத்திரவு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் வந்தது. கடந்த இரண்டு நாளா டூவீலர்கள் எல்லாம் 5ஆயிரத்திலேந்து 15 ஆயிரம் வரை தள்ளுபடி பண்ணி விக்க ஆரம்பிச்சிருக்காங்க.. இதுல ரொம்பவே பாதிக்கறது ஹீரோவும், ஹோண்டா நிறுவனமும் தான்.
சரி அப்படி வித்தாலும் எப்படி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வண்டிகளை ஒரே நாள்ல பதியமுடியும்னு தெரியல. இப்போ பெருநகரங்கள்ல ஆன்லைன்ல புக் பண்ணி அப்ரூவல் வாங்கினாதான் பதிவே பண்ணமுடியுது.. அதனால மிகப்பெரிய சிக்கல்தான். எனவே வண்டிகள் வாங்கறவங்க தள்ளுபடி விலையில் கிடைக்குதேன்னு வாங்கிட்டு அதனை ஆர்.டி.ஓ. அலுவகத்தில் பதிவு பண்ணமுடியாம தவிக்காதீங்க. இன்னொரு விஷயமும் இதுலே இருக்கு. இப்படி அதிகமான மாசு ஏற்படுத்துகின்ற வாகனங்களை நாமளும் வாங்காம, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் நம்முடைய பங்கும் இருக்கனும்னு நினைக்கலாமே.
சுற்றுப்புற சூழலும், மனித உயிர்களும் தான் முக்கியம்னு தீர்ப்பு சொன்ன அந்த மாமனிதர் க்கு பாராட்டு க்கள்.
No comments:
Post a Comment