தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

↑ Grab this Headline Animator

பாதுகாப்பு பணியில் விதிமீறல் : பொதுத் தேர்வு வினாத்தாள் 'அவுட்' ஆக வாய்ப்பு-தினமலர் செய்தி

பொதுத் தேர்வில் வினாத்தாள் அனுப் பும் முறையில், பல தில்லுமுல்லுகள் நடப்பதால், வினாத்தாள்கள், 'அவுட்' ஆகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வுக்கு, வினாத்தாளை எப்படி பாதுகாப்பாக கொண்டு செல்வது என, வழிமுறைகள் உள்ளன. 

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான சி.இ.ஓ., மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி களான டி.இ.ஓ.,க் களால், பல இடங்களில் தில்லுமுல்லு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.


தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே, சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ., அலுவலக கட்டுக்காப்பு மையங்களுக்கு, வினாத்தாள் கட்டுகள் வருகின்றன. விதிகளின்படி தேர்வு துவங்கும், 

40 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் உறைகள் அனுப்பப்படுகின்றன. 

இதற்கான, 'ரூட்' அதிகாரிகளாக, பிளஸ் 2க்கு மேல்நிலை தலைமை ஆசிரியர் அல்லது முதுகலை ஆசிரியர்; 10ம் வகுப்புக்கு, உயர்நிலை தலைமை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் மட்டுமே நியமிக்க வேண்டும். வினாத்தாள்களை கட்டுப்பாட்டுஅறையிலிருந்து, வாடகை காரில் தான் எடுத்து செல்ல வேண்டும். ரூட் அதிகாரியுடன் உதவியாளர் இருக்க வேண்டும். துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் இருக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான இடங்களில் கல்வி அதிகாரிகள், கார் வாடகையை கைப்பற்ற, சொந்த கார் வைத்திருக்கும் ஆசிரியர்களையே ரூட் அதிகாரிகளாகவும், அவர்கள் காரையே வினாத்தாள் வாகனமாகவும் பயன்படுத்துகின்றனர்; உதவியாளரும் நியமிப்பதில்லை.சொந்த கார் வைத்திருந்தால், விதிகளை மீறி பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ரூட் அதிகாரியாக மாறுகின்றனர். 

ஒரே ஒரு பெண் போலீஸ் மட்டுமே, துப்பாக்கியுடன் காரில் இருப்பார்.அவரும் காரில் மட்டுமே இருக்க வேண்டும். வழித்தட அதிகாரியாக வரும் ஆசிரியர், காரிலிருந்து இறங்கி, பள்ளி வளாகத்திற்குள் என்ன செய்தாலும், அதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், வழித்தடத்திலுள்ள ஐந்து பள்ளிகளில், 
முதல் பள்ளிக்கு வினாத்தாள் கட்டுகள், காலை, 6:30 மணிக்கே வந்து விடும். அந்த நேரத்தில், காரில் இருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் மற்ற கட்டுகளை பாதுகாத்து கொண்டிருப்பார். 
தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரும், துறை அலுவலரும் காலை, 8:30 மணிக்கு தான், தேர்வு மையம் வருகின்றனர் என்பதால், இடைப்பட்ட நேரத்தில், வினாத்தாள்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையே உள்ளது. டி.இ.ஓ., அலுவலகத்திலும், ஒரு வாரமாக வைக்கப் படும் வினாத்தாள்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த அடிப்படையில் தான், வேதியியல் வினாத்தாள், இரு தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கலாம் என, தகவல்கள் கூறுகின்றன. - நமது நிருபர் -


web stats

web stats