12-ம் வகுப்பு கணிதத்தேர்வு கடினமாக இருந்ததற்கு நிபுணர் குழு தீர்வு காணும் என்று சி.பி.எஸ்.இ. நிறுவனம் அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு கணிதத்தேர்வு கடந்த 14-ந்தேதி நடந்தது. அந்த தேர்வில் மிகக்கடினமாக கேள்விகள் கேட்கப்பட்டுஇருந்தன. இதனால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் பல கேள்விகளுக்கு விடைகளை எழுதாமல் கண்ணீர் வடித்தனர்.
எப்படியும் மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் கருணை மதிப்பெண் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு வழங்கவேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இதையொட்டி சி.பி.எஸ்.இ. நிறுவனம் தனது இணையதளத்தில் அனைவரும் அறியும் வண்ணம் ஒரு தகவலைவெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. கணித பாடத்திற்கு கடந்த 14-ந்தேதி தேர்வு நடைபெற்றது. இது தொடர்பாக மாணவர்கள், கணிதபாடத்தை கற்பித்த ஆசிரியர்கள், தேர்வுத்துறை அதிகாரிகள் போன்றவர்களிடம் கருத்து கேட்டு அந்த பாடத்திற்கான நிபுணர்குழுவிடம் அனுப்பப்படும்.விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு முன்பாக மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நிபுணர்குழு மூலம் தீர்வு காணநடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.