தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

↑ Grab this Headline Animator

அரசு விளம்பரங்களில் ஆளுநர், முதல்வர், அமைச்சர் படங்களை பயன்படுத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம்

முதல்வர் படங்களை அரசு விளம்பரங்களில் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்களைத் தவிர, வேறு அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று கடந்த ஆண்டு மே மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.


மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசு விளம்பரங்களில் முதல்வர், ஆளுநர், அமைச்சர்கள் படங்களை அச்சிடுவதால் தனிநபர் போற்றுதல் போக்கு அதிகரிக்கும். எனவே, அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்களைத் தவிர, வேறு அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மற்றும் தமிழகம், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளின் சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய மாநில அரசுகளின் மறுஆய்வு மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில் மாநில ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் படம் இடம்பெற தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

web stats

web stats