Monday, 6 October 2014

அக்டோபர் 7 பள்ளிகள் இயங்குமா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும்


“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 7.10.2014 (செவ்வாய்க்கிழமை) இயங்காது என்று அறிவிக்கப்படுகிறது” என்று தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தி தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் பரவலாக வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர், பெற்றோர்களிடத்தில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதோடு ஒரு சங்கம் “பள்ளி இயங்காது என அறிவிக்கப்படுகிறது” என்ற அறிவிப்பை வெளியிடவதற்கு சட்டத்த்தில் இடம் உள்ளதா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. ஒரு தனியார் பள்ளி விடுமுறை அறிவிக்க வேண்டுமானால் அப்பள்ளியின் முதல்வர் தகுந்த காராணங்களை பள்ளிக்கல்வி அதிகாரிக்கு தெரியப்படுத்தி அவரின் ஒப்புதலோடு தான் விடுமுறை அறிவிப்பை வெளியிட முடியும்.

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தான் அறிவிக்க முடியும். பேரிடர்காலத்தில் மாவட்ட நிர்வாகம், அதாவது மாவட்ட ஆட்சியர் அல்லது மாநகராட்சி ஆணையர் விடுமுறை அறிவிப்பார்கள். அரசை தவிர தனியார் நடத்தும் சங்கத்திற்கு இவ்வாறு விடுமுறை அறிவிக்க உரிமையோ , அதிகாரமோ கிடையாது.

மேலும் , 7.10.2014 அன்று முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட மொழிப்பாடாத்திற்கான காலாண்டுத்தேர்வுகள் 7.10.2014 அன்றும் 8.10.2014 அன்றும் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் , 7.10.2014 அன்று பள்ளிகள் இயங்குமா ? இயங்காதா ? அல்லது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்று மாணவரும் பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பள்ளிகளுக்கான விடுமுறையை அறிவிக்க அரசை தவிர வேறு எவருக்கும் உரிமை கிடையாது என்பதை திட்டவட்டமாக பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க வேண்டும். சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளவும், அரசு செய்ய வேண்டியதை தனியார் செய்ய முயற்சிப்பதும் தவறான போக்கு என்பதை உணர்ந்து அனைவரும் செயல்படும் வகையில் அக்டோபர் 7 குறித்த ஒரு தனியார் சங்கத்தின் அறிவிப்பிற்கு அரசு பதிலளிக்க வேண்டும். முன்பும் இதேபோல் பலமுறை இச்சங்கங்கள் பல்வேறு காராணங்களுக்காக அரசையே மிரட்டும் வண்ணம் பள்ளிகள் “மூடப்படும்” என்றும் பள்ளிகள் திறக்கப்படமாட்டாது என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இத்தகைய போக்குகளை அனுமதிக்ககூடாது என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வி துறையை கோருகிறது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats