Thursday, 9 October 2014

வரைவு வாக்காளர் பட்டியல் 15ல் வெளியீடு: வரும் 19 மற்றும் நவம்பர் 2 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள்

சென்னைக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த தொகுதிகள் அடங்கியுள்ள மண்டல அலுவலகங்களில்வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது .இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் அடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 2015 ஐ மைய நாளாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல்கள் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வரும் 15ம் தேதி வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தார்களது பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பது குறித்து சரிபார்த்து கொள்ளலாம்.மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள், வரும் ஜன. 2015 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், அதாவது ஜன. 1997க்கு முன் பிறந்துள்ளவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து சேர்க்கலாம். பெயர்கள் நீக்கம் தொடர்பாக, படிவம் 7ஐ பூர்த்தி செய்து நீக்கலாம்.


பதிவுகளில் திருத்தம் தொடர்பாகவும், மற்றும் சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்துள்ளவர்கள், புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஐ பூர்த்தி செய்து அதற்கான ஆவண ஆதார நகலினை சேர்த்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்திலோ அல்லது வாக்குச்சாவடி மையங்களிலோ வரும் 15 முதல் நவம்பர் 10 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் வரும் 19 மற்றும் நவம்பர் 2 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களையும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் சேர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர வலைதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம். ஜனநாயகத்தை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற ஏதுவாக, வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats