அம்பத்தூர் மண்டலத்தில் இருக்கும் பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்கப்படாதது குறித்து அம்பத்தூர் மண்டல குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு அதன் தலைவர் ஜோசப் சாமுவேல் தலைமை வகித்தார். மண்டல அதிகாரி (பொறுப்பு) ராஜேந்திரன், முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 91வது வார்டு உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் பேசியதாவது:
அம்பத்தூர் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதில் நொளம்பூர் ஊராட்சியும் மாநகராட்சியில் இணைந்தது. ஆனால் அங்கிருக்கும் ஊராட்சி பள்ளிகள் மட்டும் மாநகராட்சியுடன் இணைக்கப்படவில்லை.
வில்லிவாக்கம் ஊராட்சிக் கட்டுப்பட்டில் இந்த பள்ளிகள் இருந்தாலும் கவனிக்கப்படாத நிலையில் உள்ளது. இந்த பள்ளிக்கள் எப்போது மாநகராட்சியுடன் இணைக்கப்படும்?
மேலும் அந்த பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை கடந்த 2 ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகம் செலுத்தவில்லை. இதனால் எந்நேரமும் இப்பள்ளிகள் மின்வசதியின்றி பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்படுகிறது.
ஆனால் அதுபோன்ற நிதி ஒதுக்கீடும், சலுகைகளும் இந்த பள்ளிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட பள்ளிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகப்பேர் ஏரி திட்டம் பிரதான சாலையில் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்படு 6 மாதங்களாகியும், மின்விளக்கு பயன்பாட்டுக்கு வரவில்லை.
91வது வட்டத்தில் தெருக்களில் பெயர் பலகை வைக்கப்படவில்லை என்றார்.
சம்பந்தப்பட்ட வார்டு அதிகாரிகள் யாரும் மண்டலக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று 92வது வார்டு உறுப்பினர் நீலகண்டன் குறை கூறினார்.
மண்டல அதிகாரி ராஜேந்திரன் பேசுகையில், இன்னும் ஒரு வாரத்தில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகராட்சியிலேயே அதிக நிதியாக ரூ.265 கோடி அம்பத்தூர் மண்டலத்துக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 513 சாலைகளுக்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கி வேலை தொடங்க உள்ளது என்றார்.

No comments:
Post a Comment