Friday, 15 November 2013

இந்தியாவில் நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்! அஞ்சல் துறை அதிரடி


தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.


தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால் அதனை பெற்றுக்கொள்ள ஒரிரு நாட்கள் ஆகிவிடும் என்ற நிலை இருந்தது. இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பும் பழக்கம் குறைந்து கொண்டே வந்தது.

இதையடுத்து இந்திய தபால்துறை செல்போன் மணி ஆர்டர் முறையை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, பணம் யார் பெயருக்கு அனுப்பப்படுகிறதோ, அவருக்கு தபால் நிலையத்தில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

சம்பந்தப்பட்ட நபர், தமது ஊரில் உள்ள தபால் நிலையத்தில் அந்த எஸ்.எம்.எஸ்-ஐ காட்டி பணத்தை பெற்று கொள்ள முடியும். ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செல்போன் மணி ஆர்டரில் பணம் அனுப்பலாம்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats