கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசுப் பள்ளியில் தனியார் நிறுவனம் மூலம் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோக்கோ-கோலா நிறுவனமும் என்டி டி.வி. நிறுவனமும் இணைந்து 2011-ஆம் ஆண்டு முதல் "எனது பள்ளிக்கு ஆதரவு' என்ற பிரசார இயக்கத்தினை செயல்படுத்தி வருகின்றன.
இந்த இயக்கத்தின் மூலம் தற்போது வேர்ல்டு விஷன் இந்தியா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கிராமப்புற மற்றும் நகரப்புற பள்ளிகளில் சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னை கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை புதுப்பிக்கும் விதமாக, பாதுகாப்பான குடிநீர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே கழிப்பறை வசதிகள், உடல் நலத்தை காக்கும் விளையாட்டுகளை மேம்படுத்துதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனர்.
இது குறித்து இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் சண்முகவேல் கூறியதாவது: "எனது பள்ளிக்கு ஆதரவு' என்ற பிரசார இயக்கத்தின் மூலம் எங்களது பள்ளியைப் புதுப்பித்து, எங்கள் பள்ளி மாணவர்களுக்கு புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த கோக்கோ-கோலா நிறுவனத்துக்கும், வேர்ல்டு விஷன் இந்தியா நிறுவனத்துக்கும் எங்கள் பள்ளியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

No comments:
Post a Comment