Friday, 15 November 2013

எஸ்.எஸ்.எல்.சி / பிளஸ் 2 தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க காலகெடு மாற்றம்

பொது தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அடுத்த ஆண்டு, மார்ச் ஏப்ரலில் நடைபெறும் இடைநிலை மற்றும் மேல்நிலை பொது தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில், 15ம் தேதி (இன்று) முதல், 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆனால், 15ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி வரும், 18ம் தேதி முதல், 29ம் தேதி வரை என, மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats