Sunday, 10 November 2013

இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை இடஒதுக்கீடு முறையில் அமல்படுத்த கோரிக்கை.

திருச்சி-இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான தகுதித்தேர்வை இடஒதுக்கீடு முறையில் அமல்படுத்தக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் புதிதாக இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தகுதி தேர்வினை இடஒதுக்கீடு முறையில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் விளக்கவுரையாற்றினார்.

இடஒதுக்கீடு முறையில்


கொள்கை பரப்பு செயலாளர் குணா,மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் தினகரன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலு,மாநகர் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்,சிறுபான்மைபிரிவு செயலாளர் ஹைதர்அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதிதேர்வினை இடஒதுக்கீடு முறையில் அமல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.முன்னதாக மாணவரணி செயலாளர் கோபி வரவேற்றார். முடிவில் அசோக் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats