Thursday, 14 November 2013

13/11/13 அன்றைய டிட்டோஜாக் நிகழ்வுகள்

 13/11/13 அன்று காலை 11.00.மணியளவில் டிட்டோஜாக் குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து சங்கம் சார்பாக



1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-மாநில தலைவர்
திரு.காமராஜ்.

2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-மாநிலத்தலைவர்
திரு.தியோடர் ராபின்சன்.

3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் திரு.ரக்‌ஷித்.

4.தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர்  திரு.வின்சென்ட் பால்ராஜ்.

5.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-மாநிலப்பொருளாளர்
திரு.மோசஸ் .

6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-பொதுச்செயலர்
திரு.தாஸ்.

7.தமிழ்நாடு தொடக்க
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்-பொதுச்செயலர்
திரு.சேகர்

ஆகியோர் தலைமைச்செயலகத்தில் ஒருங்கிணைந்து,


 இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை 4200 ஆக மாற்றுதல்,
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் அரசுக்கும் ,கல்வித்துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் முறையாகத் தெரிவிக்கும் விதமாக

* தலைமை ச்செயலகத்தில் முதலமைச்சர் அவர்களின் நேர்முக இணைச்செயலர் மதிப்பிற்குரிய. சி அ.ராமன் I.A.S,அவர்கள்,


* மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களின் மூத்த நேர்முக உதவியாளர்,.


* மாண்புமிகு நிதியமைச்சர் அமைச்சர் அவர்களின் மூத்த நேர்முக உதவியாளர்,. 

* தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களின் நேர்முக உதவியாளர்,. 

*நிதித்துறைச்செயலர் அவர்களின் நேர்முக உதவியாளர்
 
* பள்ளிக்கல்விதுறை செயலர் மதிப்பிற்குரிய சபிதா I.A.S,அவர்கள்,

  * பள்ளிக்கல்வி இயக்குனர் மதிப்பிற்குரிய  இராமேஸ்வர முருகன் அவர்களின்  நேர்முக உதவியாளர்,

 * தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்பிற்குரிய  இளங்கோவன் அவர்கள்
 

 ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது..

அவர்கள் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதியளித்துள்ளனர்..

இது தொடர்பாக அரசின் நடவடிக்கையைப் பொறுத்து டிட்டோஜாக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை நவம்பர் 20-ல் டிட்டோஜேக் -ன் பொதுக்குழு- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்  அலுவலகமான முத்துசாமி அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats