நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்: சச்சின் டெண்டுல்கர் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். தனது 16-வது வயது முதல் கடந்த 24 ஆண்டுகளாக சச்சின் உலகம் முழுவதும் விளையாடி பல வெற்றிகளை தேசத்திற்குப் பெற்றுத் தந்திருக்கிறார்.
உலக விளையாட்டு அரங்கில் சச்சின் இந்தியாவின் தூதராக இருந்திருக்கிறார். கிரிக்கெட் துறையில் அவரது சாதனைகள் ஈடு இணையற்றது. அவர் புரிந்துள்ள சாதனைகளுக்கு நிகரில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு விளையாட்டு வீரராக அவரது உத்வேகம் சாலச்சிறந்தது. அவரது திறமைக்கு பல்வேறு விருதகள் வழங்கப்பட்டுள்ளன.
பாரத ரத்னா விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
அதே போல், வேதியியல் துறையில் மிகச் சிறந்த சாதனைகள் புரிந்த பேராசிரியர் சி.என்.ஆர். ராவ், 1400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.
45 புத்தகங்கள் எழுதியுள்ளார். சி.என்.ஆர். ராவ் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது ஆய்வுகளை உலகம் முழுதும் இருக்கும் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அங்கீகரித்துள்ளனர்.
No comments:
Post a Comment