Monday, 11 November 2013

76 லட்சம் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு முதல் முறையாக 76 லட்சம் கலர் அடையாள அட்டை வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வழங்கி வரும் வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளர்களின் முகத்தை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருக்கிறது. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் முகம் தெளிவாக இல்லை. இந்நிலையில் மாநில அளவில் வாக்காளர் அடையாள அட்டை களை மாற்ற தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை கலரில் தயாரித்து வழங்க முடிவு எடுக்கப்பட்டது.


முதல் கட்டமாக மாநில அளவில் 2010ம் ஆண்டு முதல் நடப்பாண் டில் கடந்த மாதம் வரை வழங்கப்பட்ட சுமார் 76 லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகளை கலரில் தயாரித்து லேமினேசன் செய்து வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. முதல்முறையாக தமிழகத்தில் கலர் அடையாள அட்டை  வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. எல்காட் மூலமாக அடையாள அட்டை தயாரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 20ம்  தேதி டெண் டர் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்படும். புதிய வாக்காளர்  அட்டை 0.8 மி.மீ தடிமன் அளவில் இருக்கும். 8.6 செ.மீ நீளம், 5.4 செ.மீ அகலத்தில் அட்டை தயாரிக்கப்படும். புகைப்படம் கலரில் இடம் பெறும். பெயர் முகவரி, ஓட்டு சாவடி, வரிசை எண் போன்றவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். டெண்டர் இறுதி செய்த 10 நாளில், 25 முதல் 30 லட்சம் அடையாள அட்டைகள் தயாரித்து வழங்க டெண்டரில் நிபந்தனை  விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் 30 இடங்களிலும், கோவை மண்டலத்தில் 25 இடங்களிலும், திருச்சி, மதுரை, சேலம் மண்டலத்தில் தலா 20 இடங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்க ஏற்பாடு செய்யப்படும். புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது புதிய வாக்காளர் அடையாள அட்டையும் வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த வண்ண வாக்காளர் அடையாள அட்டை ஆள் மாறாட்டத்தை கண்டறிவதற்கு வசதியாக இருக்கும் என்று தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats