Wednesday, 20 August 2014

பிரதமர் அறிவித்த பள்ளிக் கழிவறை திட்டம் : நிறுவனங்களிடம் இருந்து குவிகிறது நிதியுதவி




இந்திய சுதந்திர தின விழா உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பள்ளிகளில் கழிவறை அமைப்பதற்கான திட்டத்துக்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவி குவிகிறது.

பிரதமரின் சுதந்திர தின விழா உரையின் போது, நாட்டில் உள்ள பள்ளிகளில் கழிவறை கட்ட நிதியுதவி செய்யுங்கள் என்று பெரு நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்த அன்றே, ஓரியண்டல் வர்த்தக வங்கி ரூ.2 கோடியை அறிவித்தது.

தற்போது, டாடா நிறுவனம் சுமார் 10 ஆயிரம் பள்ளிகளில் இரு பாலருக்கும் தனித்தனியாக கழிவறைகள் கட்ட 100 கோடி ரூபாய் நிதியுதவி செய்வதாகக் கூறியுள்ளது.

அதே போல, பாரதி நிறுவனத்தின் துணை நிறுவனமான பாரதி அறக்கட்டளை, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக இத்திட்டத்திற்காக தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறியுள்ளது. இதற்காக அறக்கட்டளை ரூ.100 கோடியை நிதியுதவி செய்ய உள்ளது.

மேலும், ஐடி நிறுவனமான டிசிஎஸ், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிவறைகள் கட்டித் தர ரூ.100 கோடியை நிதியுதவியாக வழங்க முன் வந்துள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats