Wednesday, 20 August 2014

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு.


ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின் உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த பணி பதிவேடுகளில் ஆசிரியர்களின் விடுப்பு தொடர்பான பதிவுகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக தொடக்க கல்வி இயக்குநருக்கு புகார்கள் சென்றன.

அதன் அடிப்படையில் தமிழக தொடக்க கல்வித் துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரிய காலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண் டும்.2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

*.உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரிய காலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண் டும்.

*.ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் அவர்கள் பயின்ற உயர்கல்வி விவரங்களை பதிவு செய்யும் முன்பு உயர்கல்வி பயில்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும், சான்றிதழ்கள் தற்காலிகமா? நிரந்தரமானதா என்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

*.ஒவ்வொரு ஆண்டிலும் டிச.31ம் தேதி ஒவ்வொரு ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல், பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் ஆகியவை பணி பதிவேட்டில்உள்ள பதிவேடுகளின் அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது.

*.எனவே, சரியான சான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள் நடந்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்டஅலு வலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

*.ஆசிரியர்களின் வளர் ஊதியம், பதவி உயர்வு, ஊதியம் நிர்ணயம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய அனைத் தும் பணி பதிவேட்டில் உள்ள பதிவுகளின்அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது.

*.எனவே ஒவ் வொரு உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணி பதிவேடுகளில்விவரங்கள் விடுபட்டிருந்தால் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 2 மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து பணி பதிவேடுகளும் அலுவலகத்தில் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

*.உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலம் வேறு ஒன்றியங்களுக்கு மாறுதல் பெற்று செல் லும் போது அனைத்து ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் ஆசிரியர் எடுத்த விடுப்புகள் மற்றும் பணி சரிபார்ப்புகள் அனைத்தையும் பதிவு செய்து விட்டுத் தான் செல்ல வேண் டும்.

*.உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வு செய் யும் போது இந்த விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats