புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என்னுடைய மகன் பிரகாஷ், புதுக்கோட்டை செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தார். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதினார். 1080 மதிப்பெண்கள் பெற்றார்.
இயற்பியலில் 198, வேதியியலில் 189, கம்ப்யூட்டர் அறிவியலில் 178, கணிதத்தில் 153 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கணிதத் தேர்வை நன்றாக எழுதியும், மதிப்பெண்கள் குறைந்ததால் விடைத்தாள் நகல் கேட்டு பெற்றோம். 44 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் நகலில் 35 முதல் 38 பக்கங்கள் இல்லை. என் மகன் எழுதிய கணிதப் பாடத்துக்கான முழுமையான விடைத்தாளை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், ‘காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் கணித பாடத்தில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் உரிய மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்‘ என உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment