Tuesday, 19 August 2014

பள்ளிகளில் கழிவறை கட்ட ரூ.100 கோடி நன்கொடை: டிசிஎஸ்

நாடு முழுவதும் உள்ள மகளிர் பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, 10,000 கழிவறைகள் கட்ட ரூ.100 கோடி நன்கொடையை மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த"சுத்தமான இந்தியா' என்ற திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், மகளிர் பள்ளிகளில் கழிவறைகள் கட்ட எம்.பி.க்களும், பெருநிறுவனங்களும் உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதையடுத்து சுத்தமான இந்தியா திட்டத்துக்கு உதவும் முயற்சியாக இநத நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.இந்த நிதியின் மூலம் கட்டப்படும் கழிவறைகள், பெண் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats