பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 62,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி.
தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வெற்றி உங்கள் கையில் வழிகாட்டும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:
தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வெற்றி உங்கள் கையில் வழிகாட்டும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:
தமிழக முதல்வர் விஷன் 2023 எனும் திட்டத்தை அறிவித்து, அதற்கு அடிப்படையாகக் கல்வியில் தமிழகம் முதல்நிலை பெற வேண்டும் என்பதற்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ. 62,000 கோடி ஒதுக்கீடு செய்து கல்வி வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்து வருகிறார்.
வழிகாட்டி புத்தகங்கள் கடந்த ஆண்டு ஒரே புத்தகமாக இருந்தது. நிகழாண்டு தமிழக முதல்வர் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி வழிகாட்டி கையேடுகளை வெளியிட்டுள்ளார். இவற்றை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் முதலிடம் பெற வேண்டும் என்றார் அமைச்சர்.
விழாவுக்குப் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபிதா தலைமை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன், அனைவருக்கும் கல்வித் திட்டம் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். ரெங்கசாமி (தஞ்சாவூர்), எம். ரெத்தினசாமி (திருவையாறு), மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், வல்லம், பிள்ளையார்பட்டி ஊராட்சிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறையில் பயின்று வரும் மாணவர்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment