சில நிமிடத் தாமதத்துக்காக மாணவர்களை வீட்டுக்குத் திருப்பி அனுப்பும் தனியார் பள்ளிகளின் நடவடிக்கை தவறானது என்று அமைச்சர் ந.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த மாணவர்கள் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்பாராத விதமாக தாமதமாக வரும், மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், வீட்டை விட்டு பள்ளிக்குத்தான் மாணவர்கள் புறப்பட்டு வருகின்றனர். வேண்டுமென்றே எவரும் தாமதமாகச் வருவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில நிமிடத் தாமதத்துக்காக மாணவர்களை பள்ளிக்குள் விடாமல் வீட்டுக்குத் திருப்பி அனுப்பி வைப்பது, பெற்றோர்களை அவமரியாதையாகப் பேசுவது போன்ற செயல்களில் பள்ளி நிர்வாகிகள் ஈடுபடுவது மாணவர்களை மன ரீதியாக பாதிக்கும்;
இதுபோன்ற நெருக்குதல் காரணமாக பள்ளிக்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு, தாங்கள் செல்லும் வாகனங்களை அதிவேகத்தில் செலுத்தி, விபத்தில் சிக்குகின்றனர்; இதில் உயிர்ப்பலி ஏற்பட்டால் அதற்கு பொறுப்பேற்பது யார்? என்பதையும் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். இப்பிரச்சனையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை செயலர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment