Sunday, 29 June 2014

திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு கூட்டம்-நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்கள்

 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் காலை 11. மணியளவில் திருவண்ணாமலை டவுன் ஹால் நடுநிலைப்பள்ளி மையக்கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு போளுர்வட்டாரக்கிளைத்தலைவர் திரு அண்ணாமலை தலைமை தாங்கினார்.மேலும் முன்னாள் மாநில  பொருளாளர்  திரு.அ.அப்துல் காதர் அவர்கள் முன்னிலை வகித்தார்.மாவட்டச்செயலரும்,மாநில துணைத்தலைவருமான திரு கே.பி.ரக்‌ஷித் அனைவரையும் வரவேற்று தீர்மானங்களினை முன் மொழிந்தார். 20.07.2014 அன்று நடைபெற உள்ள மாநில பொதுக்குழுவினை எவ்வாறு சிறப்பாக நடத்தலாம் என கருத்து கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது.மாநில பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள்கலந்து கொண்டு மாநில பொதுக்குழுவினை சிறப்பாக நடத்தும் விதமான சில ஆலோசனைகளை வாழங்கினார். மாவட்டக்கிளை மற்றும் வட்டாரக்கிளை செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து பொருப்பாளர்களை உடன் உறுப்பினர் சேர்க்கையை முடிக்கவும்,பின்னர் இவ்வாண்டு  வட்டாரத்தேர்தல்கள் நடத்தி முடிக்கவும் கேட்டுக்கொண்டார்.

            திருவண்ணாமலை யில் நடைபெறும் மாநில பொதுக்குழு சங்கத்திற்கு திருப்புமுனை தருவது போல அமையவேண்டும் என்று கூறியதுடன் ”””அனைத்து வட்டார ,மாவட்ட ,மாநில பொறுப்பாளர்கள் அனைவரும்  இயக்க இதழ்”ஆசிரியர் பேரணி”யின் ஆயுள் உறுப்பினராகச் சேர்த்தல்”””””” என்ற இயக்கத்தினை இம்மாவட்டத்தில்  முதன் முதலில் துவங்குவதாக அறிவித்தார்

            அதன்படி 20.07.2014 அன்று நடைபெறும் பொதுக்குழுவில் மாவட்டம் சார்பில்  பெருமளவிலான பேரணி இதழ் ஆயுள்சந்தாக்கள் தருவதென  செயற்குழு முடிவாற்றியது.
           மாவட்ட பொருளாளர் அர்ச்சுனன் நன்றியுரையுடன் கூட்டம் முடிவடைந்தது

தீர்மானக்கள்

1.20.07.2014 அன்று திருவண்ணாமலை நகரில் நடைபெற உள்ள மாநில பொதுக்குழுவை மாவட்டக்கிளை சார்பாக சிறப்பாக நடத்திக்கொடுப்பது

2.பொதுக்குழு செலவினை வட்டாரங்கள் பகிர்ந்து கொள்வது

3.டெல்லி சென்று புதிய அரசின் பிரதமர்,கல்வி அமைச்சர்.நிதியமைச்சர் ஆகியோரை சந்தித்து  ஆசிரியர் நலன்சார் பிரச்சினைகளை தீர்க்கக் கோருவது

5.2014 ஆம் ஆண்டின் இறுதியில் டெல்லியில் கோரிக்கை மாநாடு நடத்த மாவட்டசெயற்குழு மாநில அமைப்பைகேட்டுக்கொள்கிறது.

5.மேற்கு தொடர்ச்சி மலையில் கேரள மலைப்பகுதியில் உள்ள கட்டபிபா,மலப்பிரபா எனும் நதிகளில் ஆண்டுக்கு 2000 டி.எம் சி தண்ணீர் வீனாகி அரபிக்கடலில் கலக்கிறது.இதனை 5 கிமீ தூரம் மட்டுமே மலையைக்குடைந்து காவிரியில் கலக்கும் விதமாக கால்வாய் மூலம் இணைத்தால் தமிழகத்தின் 63 சதவீத வறண்ட பகுதியும் ,கர்நாடகத்தின் 73 சதவீத பாசனப்பகுதியும் பயன் பெறும் .எனவே மத்திய அரசு இதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி இரு மாநில தண்ணீர் தேவை பிரச்சினையை தீர்க்ககோரும் மனுவினை பிரதமர்  மோடி அவர்களுக்கு அளிக்க மாநில அமைப்பினை கேட்டுக்கொள்கிறது

6 திருச்சி மாநகரில் ஆசிரியர் இல்லம் அமைக்க  தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியதைப்போல திருவண்ணாமலை நகரிலும் ஆசிரியர் இல்லம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை அளிப்பது

7..ஆங்கில வழிக்கல்வி ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து தொடக்க/நடுநிலைப்பள்ளிகளிலும் அதெற்கென கூடுதலாக ஆசிரியர் நியமிக்க தமிழக அரசை செயற்குழு கோருகிறது.

8. தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கும் 14 வகையான விலையில்லாப்பொருட்களை ஒன்றியத்தலைமையிடத்தில் வழங்கப்படுவதால் ,அதனை பள்ளிகளுக்கு கொண்டு சென்று வழங்குவதில் பெரும் சிரமமும், காலவிரையமும்,பெரும் பொருட்செலவும் ஏற்படுவதுடன்,கற்பித்தல் பணியும் பதிக்கப்படுகின்றது.அதனை தவிர்க்கும் விதமாக விலையில்லாபொருட்கள் அனைத்தும்  அந்தந்த பள்ளிகட்கே நேரடியாக  அரசே வழங்க வேண்டும் என தமிழக அரசை  இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது

9.மாணவர் சேர்க்கையை உயர்த்த சரியான வழியென கருதி அனைத்து ஆரம்பப்பள்ளிகளிலும் அரசு,  நர்சரி (LKG & UKG)வகுப்புக்களை உடனே தொடங்க வேண்டும் . என தமிழக அரசை  செயற்குழு கேட்டுக்கொள்கிறது

10.திருவண்ணாமலை நகரில் இயங்கும் பள்ளிகளில் பௌர்ணமி கிரிவல நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில்போக்குவரத்து நெரிசல் காரணமாக பெரும் சிக்கல் உள்ளதால் மாதந்தோறும் பௌர்ணமி கிரிவல நாட்களில் மட்டும் பள்ளி வேலை நேரத்தை  காலை8.30 மணிமுதல் 12.30 மணி வரை மட்டும் நடத்திக்கொள்ள அனுமதிக்க இச்செயற்குழு தமிழக அரசினை கேட்டுக்கொள்கிறது.இதுசார்ந்த மனுஏற்கனவே அளிக்கப்பட்டதன் மீது  உடன் ஆணை பிறப்பிக்க தமிழக அரசைக்கோருகிறது.

11. திருவண்ணாமலை மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம் மிகச்சிறிய இட நெருக்கடிமிகுந்த தனியார்கட்டிடத்தில் இயங்குகிறது
             எனவேஆட்சியர் அலுவலக வளாகத்தில்  ஒருங்கிணைந்த அனைத்து கல்வித்துறை அலுவலகம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசிடம் கோருகிறது.
                    அதுவரை மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தை காலியாக உள்ள அரசுப்பள்ளிகட்டிடங்களில்  (Municipal Boy Hr Sec school or Thiyaki Hr Sec School)ஏதேனும் ஒன்றில் மாற்றம் செய்து தர மாவட்ட ஆட்சியரிம் கோரிக்கை வைப்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats