பழைய பொருட்களை கொண்டு கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி அலகாபாத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.
டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்து வரும் சுதான்சு என்ற மாணவர் ரூ.4 ஆயிரம் செலவு செய்து இந்த இயந்திரத்தை தயாரித்துள்ளார். கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த இயந்திரம் தயாரித்த மின்சாரத்தை சேமிக்கவும் செய்கிறது.
இந்த இயந்திரத்தை கடற்கரையின் சமமான பகுதியில் வைத்துவிட்டால், ஒவ்வொரு அலையும் அதன் மீது மோதிச் செல்லும் போது ஒரு வோல்ட் மின்சாரம் உற்பத்தியாகிறது. அந்த மின்சாரம் டைனமொ வழியாக பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தை ஆறுகள் மற்றும் ஏரிகளிலும் பொருத்த முடியும்.
இந்த இயந்திரத்திற்கு 'ஷீ-ஷோர் எலக்ட்ரோ ஜெனரெட்டர்' என்று பெயரிட்டுள்ளார் சுதான்சு. இந்த கண்டுபிடிப்பிற்காக அவருக்கு 'சைல்டு சைன்டிஸ்ட்' சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
அவரது இயந்திர மாடலை சிறு சிறு மாற்றம் செய்தால் வணிக ரீதியாக அதனை பயன்படுத்த முடியும் என தொழிலதிபர் ராஜீவ் நாயர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment