Tuesday, 1 July 2014

அரசுப்பள்ளி-சித்ரா ராஜ்


இலவசமாய் கிடைப்பதினாலே
கல்வியின் அருமை
புரிவதில்லை
கிராமப் புற பிள்ளைகட்கு...


ஆடு மேய்க்க லீவு போட்டு
தம்பி பார்த்துக்க லீவு போட்டு
கழனி வேலைக்கு லீவு போட்டு
ரேஷனில் அரிசி, சக்கரை வாங்க
அனுமதி பெற்று....
வாழ்வாதாரமே போராட்டத்தில்....!
கல்வி என்பது இரண்டாம் பட்சம்
ஐந்தாம் வகுப்பு
ஆர்த்திக்கு
அ,ஆ, தெரியாது
ஏ,பி,சி,டி தெரியாது
தவறாமல் பள்ளிக்கு வருவாள்
தினம் ஒரு முட்டைக்காக


****
ஐந்தாம் வகுப்பு
லஷ்மிக்கு
இரண்டு தம்பி ஒரு பாப்பா
மூத்தவளாய் இவள் பிறந்து
குழந்தை வளர்ப்பில்
மூழ்கிவிட்டாள்
****
நாலு பெண்ணுக்கு பிறகு
ஐந்தாவது ஆண்
ஆறாம் வகுப்பு ஐயப்பன்
வரம் வாங்கி தவமிருந்து
பெற்ற பிள்ளை செல்லப் பிள்ளை
விரும்பினால் பள்ளிக்கு வருவான்
*****
ஏ பி சி டி சொல்லிக் கொடுத்தே
மண்டை குழம்பி போன
மூனாப்பு டீச்சர்
ஒரு அடி கொடுத்து விட்டார்
சூர்யா என்ற பையனுக்கு
மறு நாள் ஆள் படை
பரிவாரத்துடன் நெஞ்சை
நிமிர்த்தி வந்தான் சூர்யா்
நீ யாரு எம்புள்ளைய அடிக்க
நானே அடிச்சதில்ல....
படிக்கலைனா போயி போறான்
இன்னொரு தபா என்புள்ளைய தொட்ட
கையிருக்காது உனக்கு..
டீச்சரை அழவைத்து சென்றான்
சூர்யாவின் அப்பன்...
முரட்டு முருகேசன்
****
வீட்டுப் பாடம் செய்யாத
வேதவள்ளியை
ஆங்கில ஆசிரியர் கண்டிக்க
மறு நாள் மட்டம் போட்டாள்
ஏ... டீச்சரம்மா
உனக்கு கூறு இருக்கா
வயசுக்கு வந்த பிள்ளைய
வஞ்சி இருக்க
ரோஷம் தாளாம
நாண்டுக்கிட்டு செத்து போனா
நீதான் பொறுப்பாவ...
மிரட்டிவிட்டு போனாள் பாட்டி
****
ஆயிரம் ஆயிரம்
பிரச்சினைகள் சுமந்தும்
தடுமாற்றத்தோடு
தடம் மாறாமல்
ஆங்கில பள்ளிக்கு
ஈடு கொடுத்து்
இயங்கி கொண்டு தான் இருக்கிறது
அரசுப்பள்ளி
****
இப்படியாய் அரசுப்பள்ளி
அனைத்தையும் இலவசமாய் கொடுத்து
அரவணைத்து வந்தாலும்
கல்வியின் மகத்துவம்
இன்னும் புரியவில்லை
சில பாவப்பட்ட மனிதர்களுக்கு...

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats