Monday, 30 June 2014

இணையவழி கலந்தாய்வு தகவல்கள்...

இணையவழி கலந்தாய்வு குறித்து சில ஆலோசனைகள்


1.ஒவ்வொரு மண்டலத்திலும் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் படி அந்த மண்டலத்திற்கு தகுந்தவாறு முன்னுரிமை பட்டியல் தனித்தனியாக தயார் செய்யப்படும்.



2.ஒரு மண்டலத்தை தேர்ந்தெடுத்த பிறகு வேறு ஒரு மண்டலத்தை எக்காரணம் கொண்டும் தேர்வு செய்ய முடியாது.


3.கலந்தாய்வு தங்களது மாவட்டத்தில் எந்த இடத்தில் நடைபெறுகின்றது என அறிந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும்.தாமதமாக செல்ல வேண்டாம்.


4.கலந்தாய்வு நடைபெறும் மையத்தில் ஒவ்வொரு மண்டலமாக தனி தனியாக கணினி முன்பு நடைபெறும்,வரிசைப்படி தேர்ந்தெடுக்கலாம்


5.தாங்கள் தேர்வு செய்த மண்டலத்தைப் பற்றி தெளிவான ஆலோசனைகளை கொண்டு முடிவு எடுக்கவும்,ஒரு இடத்தைப் தேர்வு செய்துவிட்டால் மீண்டும் எக்காரணம் கொண்டும் வேறு இடத்தை தேர்வு செய்ய இயலாது.


6.தாங்கள் கலந்தாய்வு மையத்திற்குள் செல்லும் போது கணினி அறைக்குள் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.


7.தங்களுக்கு கணினியில் பதிவு செய்த விவரத்தை கொடுத்தால் எடுத்துச் செல்லவும் அவ்வாறு இல்லாவிடில் கலந்தாய்வு மையத்திற்குள் தேவையான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.


8.30.06.2014 அன்று அனைவரும் கலந்தாய்விற்கு செல்ல வேண்டும், மேற்கொண்டு தொடரும் பட்சத்தில் மறுநாள்(01.07.2014) செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats