தமிழகத்தில்,மூன்று பாலிடெக்னிக்கல்லூரிகளுக்கு, அகில இந்தியதொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.,)அனுமதி வழங்கியுள்ளது.
பொறியியல்கல்லூரிகளுக்கு அடுத்தபடியாக,கலை, அறிவியல்கல்லூரிகளை மாணவர்கள்நாடினாலும், பத்தாம்வகுப்பு முடித்து, பாலிடெக்னிக்கல்லூரிகளில் சேர்ந்து, பொறியியல்படிப்பிற்கு அடித்தளம் அமைக்கும்மாணவர்களும் உண்டு. சமீபத்தியநிலவரப்படி, பாலிடெக்னிக்பொறியியல்டிப்ளமோ படிப்புகளுக்கு அதிக மவுசு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொறியியல் படித்து முடித்து, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றுவோரும் உள்ளனர். டிப்ளமோவுடன், களப்பயிற்சி முடித்து, 20 ஆயிரம்ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களும் உள்ளனர். எனவே, நாடுமுழுவதும், பொறியியல்
கல்லூரிகளை துவங்குவதை விட, பா
லிடெக்னிக் கல்லூரி துவங்குவதற்கு பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.பொறியியல்கல்லூரிகளுக்கு அடுத்தபடியாக,கலை, அறிவியல்கல்லூரிகளை மாணவர்கள்நாடினாலும், பத்தாம்வகுப்பு முடித்து, பாலிடெக்னிக்கல்லூரிகளில் சேர்ந்து, பொறியியல்படிப்பிற்கு அடித்தளம் அமைக்கும்மாணவர்களும் உண்டு. சமீபத்தியநிலவரப்படி, பாலிடெக்னிக்பொறியியல்டிப்ளமோ படிப்புகளுக்கு அதிக மவுசு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொறியியல் படித்து முடித்து, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றுவோரும் உள்ளனர். டிப்ளமோவுடன், களப்பயிற்சி முடித்து, 20 ஆயிரம்ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களும் உள்ளனர். எனவே, நாடுமுழுவதும், பொறியியல்
கல்லூரிகளை துவங்குவதை விட, பா
தமிழகத்தில், பொறியியல் கல்லூரி துவங்குவோர், மார்ச் மாதத்திற்குள் விண்ணப்பிக்க, அண்ணா பல்கலை அறிவித்தது. ஆனால், இதுவரை ஒரு விண்ணப்பம் கூட வரவில்லை என கூறப்படுகிறது. மாறாக, பல கல்லூரிகள், நிர்வாக ஒதுக்கீடு இடங்களை கூட, அண்ணா பல்கலையில் ஒப்படைத்து,
நிரப்பித் தரும்படி கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம், தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி துவங்குவதற்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு, 36 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக
கூறப்படுகிறது. நாடு முழுவதும் இருந்து,463 பாலிடெக்னிக்
கல்லூரிகளுக்கான அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில், தமிழகத்தில், மூன்று உட்பட, நாடு முழுவதும், 39 பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.இதன் மூலம், பொறியியல் டிப்ளமோவில், 300 இடங்கள் அதிகரித்துள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, அரசு, 41, அரசு உதவி, 34, சுயநிதி, 406 உட்பட,
501 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றுடன், தற்போது மூன்று புதிய
கல்லூரிகளும் இணைந்துள்ளன. தமிழகத்தில், 27 உட்பட நாடு முழுவதும், 270 பாலிடெக்னிக், பார்மசி கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பிப்பது தொடர்பான ஆய்வில், உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளுக்கான, அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில், 27 கல்லூரிகளில், 11 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும் அடக்கம். அங்கீகாரம்
குறித்து முடிவெடுக்க, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தினர், அகில இந்திய
தொழில் நுட்ப கல்வி கவுன்சிலில், கடந்த மாதம், 30, 31 தேதிகளில் ஆஜராகவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில், அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment