குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் 7ம் தேதி சென்னையில் நடக்கிறது. கடந்த 2011-13ம் ஆண்டுக்கான பணியிடங்களில் நேரடியாக பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2012 ஜூன் 13ம் தேதி வெளியிட்டது. இதற்கான எழுத்து தேர்வு 2012 நவம்பர் 4ம் தேதி நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் நேர்காணல் இல்லாத மீதம் உள்ள பதவிகளுக்குஉரியவர்களை தேர்வு செய்வதற்காக 2ம் கட்ட கவுன்சலிங் நடக்க உள்ளது.
இதற்கான தெரிவுப்பட்டியல் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கவுன்சலிங் 7ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கிறது. இதுதொடர்பான அழைப்பு கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அழைப்பு கடிதங்களை மேற்கண்ட இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் 256 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் விண்ணப்பத்தில் குறித்துள்ள விவரங்கள் தவறாக இருந்தால் கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. கவுன்சலிங் காலை 8.30 மணிக்கு தொடங்கும்.
பங்கேற்க தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், தமிழ் வழியில்
படித்தவர்களுக்கான முன்னுரிமை போன்ற சிறப்பு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள், நிரப்பப்படாத பணியிடங்கள் இருந்தால் அவற்றை நிரப்புவதற்கான கவுன்சலிங் பின்னர் நடக்கும்.
No comments:
Post a Comment