இதர வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்துவதால் எஸ்பிஐக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும், லாபத்தை அதிகமாக்கவும் வங்கி தலைமை, தனது ஊழியர்களுக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், எஸ்பிஐ குடும்பத்தில் இடம்பெற்றுள்ளவர்கள், வேறு வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தி வருகின்றனர்.
எஸ்பிஐயில் பதிவான தகவலின்படி, ஒவ்வொரு மாதமும் எஸ்பிஐ ஊழியர்கள் மட்டும் இதர வங்கி ஏடிஎம்களில் 2,80,000 முறை பணம் எடுக்கின்றனர். இதனால், எஸ்பிஐ வங்கிக்கு ரூ.42 லட்சம் மற்றும் வரி செலவாகிறது. ஒருவர் எஸ்பிஐ கார்டை வைத்துக் கொண்டு வேறொரு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது, எஸ்பிஐ வங்கியை விட, அந்த வங்கி ரூ.15 மதிப்பு உயருகிறது.
இதனால், எஸ்பிஐக்கு கிடைக்க வேண்டிய லாபத்தில் ரூ.5 கோடி ஒவ்வொரு ஆண்டும் இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் எஸ்பிஐ ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தாது. எஸ்பிஐ ஏடிஎம் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்குமே பொருந்தும் என்றாலும், முதல் கட்டமாக அதன் ஊழியர்களுக்கு வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment