Friday, 4 April 2014

தேர்தல் பணியாற்ற மறுத்த அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை

தேர்தல் பணியாற்ற மறுத்த அரசு அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தவறான மருத்துவ சான்றிதழ் கொடுத்தவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் வெங்கடாசலம் எச்சரித்துள்ளார். தேர்தல் பணிக்காக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் மற்றும் கரூர் தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூர்
ஆகிய பகுதிகளில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் தேர்தல் பணியை ஏற்க மறுத்த அலுவலர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 26 மற்றும் பிரிவு 134ன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சுருக்கெழுத்தராக பணியாற்றும் அலுவலர் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் தவறாது தேர்தல் பயிற்சி வகுப்பு, தேர்தல் பணியில் கலந்து கொள்ள வேண்டும். மருத்துவ சான்றிதழ் பெயரில் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மனுக்கள், மாவட்ட மருத்துவக்குழு முடிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில் தவறான மருத்துவ காரணங்கள் என மருத்துவக்குழு முடிவு செய்யும் பட்சத்தில், அரசு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats