Tuesday, 1 April 2014

புதிய தலைமை செயலர் இன்று பொறுப்பேற்பு:

புதிய தலைமைச் செயலர் பொறுப்பேற்பு தகவல், ரகசியமாக வைக்கப்பட்டதால், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள், நேற்று முழுவதும் பரிதவித்தனர்.

நேற்று, பிரதமை என்பதால், பொறுப்பேற்பு ஒத்தி வைக்கப்பட்டது. ஓய்வு : தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், நேற்று, பணியில்
இருந்து ஓய்வு பெற்றார். அவர், புதிதாக ஏற்படுத்தப்பட்ட, அரசு ஆலோசகர்

பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமைச் செயலராக, மோகன்
வர்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலர் ஓய்வு பெறும்
நாளில், புதிய தலைமைச் செயலர் பொறுப்பேற்பது வழக்கம். எனவே, நேற்று, புதிய தலைமைச் செயலர் பொறுப்பேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து, தலைமைச் செயலர் அலுவலகத்தில் கேட்டபோது, "தகவல் எதுவும்
தெரியாது' என்றனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தை கேட்டபோது,
"எங்களுக்கு தகவல் இல்லை' என்றனர். குழப்பம் : இதனால், பத்திரிகையாளர்கள் விவரம் அறிய முடியாமல் தவித்தனர். உயர் அதிகாரிகளை கேட்டபோது, மதியம் பொறுப்பேற்க உள்ளதாக
தெரிவித்தனர். இதனால், குழப்பம் ஏற்பட்டது. மதியம், மோகன் வர்கீஸ் சுங்கத், தலைமைச் செயலர் அறைக்கு வந்தார். அங்கு, ஷீலா பாலகிருஷ்ணனை சந்தித்தார்.     அதன்பின்னரும்,பொறுப்பேற்பு நிகழ்ச்சி உண்டா, இல்லையா? என்பதை அறிய முடியாத நிலை ஏற்பட்டது.
அனைவரும் ரகசியம் காத்தனர்.

விவரம் தெரியவில்லை : தலைமைச் செயலக அலுவலக ஊழியர்களும்,
அதிகாரிகளும், விவரம் தெரியாமல் காத்திருந்தனர். மாலை, முதல்வர்
அலுவலகத்தில் இருந்து, தகவல் வராததால், பொறுப்பேற்பு குறித்து,
முடிவு செய்யப்படவில்லை. நேற்று, பிரதமை என்பதால், பொறுப்பேற்கவில்லை. மறுநாள் பொறுப்பேற்க, சட்டத்தில் இடம் உள்ளது என தகவல் வெளியானது;            


அதை உறுதிப்படுத்தவும், அதிகாரிகள் மறுத்து விட்டனர். இரவு 7:00 மணிக்கு, "புதிய    தலைமை செயலர், ஏப்ரல் 1ம் தேதி பதவியேற்பார்' என,
தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats