Friday, 4 April 2014

சிறந்தவை சிறியதாக: வளர்ந்து வரும் மீநுண் தொழில்நுட்பம்

"சிறந்தவை சிறியதாக" என்ற வார்த்தைகளுக்கு முற்றிலும் பொருத்தமான அளவில் எதையும் சிறியதாக படைக்கும் துறையாக நானோ டெக்னாலஜி (மீநுண் தொழில்நுட்பம்) துறை விளங்குகிறது. மற்ற பொருளுக்கு மாற்றாகவும், இயற்கையோடு இணைந்ததாகவும் சிறிய பொருளாக உருவாக்குவதே நானோ தொழில்நுட்பத்தின் நோக்கம். விவசாயம் மற்றும் மருத்துவத்துறையில் இதனால் மாபெரும் மாற்றங்கள் உருவாகி வருகிறது.

வழங்கப்படும் படிப்புகள்: பி.எஸ்சி. / பி.டெக். / எம்.டெக். / எம்.எஸ்சி.
கல்வித்தகுதி: பிளஸ் 2
தேவையான திறன்கள்
அறிவியல் மேல் ஆர்வம் இருக்க வேண்டும்.
கெமிக்கல்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும்.
தொழில்நுட்பங்கள் மேல் ஈடுபாடு வேண்டும்.
ஆராயும் குணம் வேண்டும்.
படிப்பில் வழங்கப்படும் முக்கிய பாடங்கள்
நானோடெக்னாலஜியில் நானோ மெட்டிரீயல்ஸ், நானோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நானோ பயோடெக்னாலஜி ஆகிய மூன்று பெரும் பிரிவுகள் உள்ளது. இளநிலையைப் பொறுத்த வரையில் சாலிட் ஸ்டேட் பிசிக்ஸ், ஃபவுண்டேஷன் ஆஃப் நானோஸ்கேல் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ், நானோ மெஷர்மென்ட், அடாமிக் அன்ட் எலக்ட்ரானிக் ஸ்ட்ரக்சர் ஆஃப் மேட்டர், கேரக்டரைஷேஷன் டூல்ஸ் ஃபார் நானோ மெட்டீரியல்ஸ், பயோ இன்ஜினியர்டு நானோ மெட்டீரியல்ஸ், ஜெனரிக் மெதடாலஜி ஃபார் நானோ டெக்னாலஜி போன்றவை முக்கிய பாடங்களாக வழங்கப்படுகிறது. 
வேலைவாய்ப்பு
மருத்துவம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அரசு, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த துறையை மேம்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர். மாணவர்களும் தாங்கள் வேலை பார்க்கும் பிரிவை தாங்களே தேர்ந்தெடுக்கலாம். 2 வகையான வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் ஆராய்ச்சியாளராக பணியாற்றலாம் அல்லது முதன்மை மேலாளர்களாக நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெறலாம்.
நானோ மெட்டீரியல்ஸ், நானோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நானோ பயோடெக்னாலஜி என்ற மூன்று பெரும் பிரிவுகளில் வேலைவாய்ப்பு அதிக அளவில் உள்ளது. குறிப்பாக இவை சார்ந்த ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், வான்வெளித் துறை மற்றும் நுகர்வோர் தேவைகள் போன்றவற்றில் நானோ டெக்னாலஜி படித்தவர்களின் தேவைப்பாடு அதிகம் உள்ளது.
சிறந்த கல்வி நிறுவனங்களில் சில
ஐ.ஐ.டி.
என்.ஐ.டி.
அமிதி பல்கலைக்கழகம்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.
சிறந்த வெளிநாட்டுக் கல்வி நிலையங்கள்
ஹார்வர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா.
கார்னெல் பல்கலைக்கழகம், அமெரிக்கா.
கொலம்பிய பல்கலைக்கழகம், அமெரிக்கா.
இம்பீரியல் கல்லூரி, இங்கிலாந்து.
லண்டன் பல்கலைக்கழக கல்லூரி, இங்கிலாந்து.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats