பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறான கேள்விக்கு மார்க் அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த மாணவி சவுதீனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 விலங்கியல் தேர்வு கடந்த மாதம் 20ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் கொடுக்கப்பட்ட வினாத்தாளில் 25வது கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியிடப்பட்ட வினாத்தாளில் சரியான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்திலான வினாத்தாளில் உள்ள 25வது கேள்வி தவறாக உள்ளது. எனவே இந்த தவறான கேள்விக்கு விடை எழுதிய அனைவருக்கும் 3 மார்க் தர வேண்டும். அதுவரை விடைத்தாள் திருத் தம் செய்ய தடை விதிக்க வேண்டும். மார்க் கொடுக்க உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார். வழக்கை நீதிபதி ராஜேந்திரன் விசாரித்து, வரும் 4ம் தேதி (நாளை) பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல் அருள்முருகன் ஆஜராகி வாதாடினார்.
No comments:
Post a Comment