Wednesday, 2 April 2014

ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுக்க வங்கி கணக்கு தேவையில்லை; ரிசர்வ் வங்கி ஒப்புதல்

வங்கி கணக்கு இல்லாமல் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுக்கவும், பணம் அனுப்பவும் கட்டண சேவை முறையில் செயல்படுத்தகடந்த புதனன்று நாஸ்காம் தலைமை அரங்கில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ஒப்புதல் அளித்தார். ரிசர்வ் வங்கியின் இந்த ஒப்புதல், நாட்டின் அனைத்து பிரிவுகளிலும் ஆழமான நிதி சேவையை ஊக்குவிக்க வேண்டும் என்ற மத்திய வங்கியின் அர்ப்பணிப்பு உணர்வினை காட்டுகிறது.

வங்கி கணக்கினை பெற்றுள்ள தனி நபர் மட்டுமே ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் பணத்தினை பெற்று கொள்ள தற்போதுள்ள ஏடிஎம் வசதி அனுமதி அளிக்கிறது. இந்தியாவில் ஒரு கணிசமான தொகையினர் பணம் அனுப்பும் சேவையை எதிர் நோக்கியுள்ள நிலையில், வங்கி கணக்கினை பெறாதவர்களும் இந்த வசதியினை பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வைப்பு நிதி வைத்திருப்பவரின் அங்கீகாரத்தின் மூலம் இந்த வசதியினை அளிக்க மொபைல் தொழில்நுட்பத்தால் முடியும்.
மாறுதலுக்குரிய வங்கி கணக்கிலிருந்து பணத்தினை எடுக்கும் நிலையில் உள்ள வங்கி கணக்கு பெற்றிராத தனி நபர், இருவருக்கும் பொதுவான வங்கி பணம் எடுத்து கொண்டதற்கான குறியீட்டப்பட்ட பெருநறுக்கான ரசீதையும், பண பரிவர்த்தனைக்கான செயல்முறையையும் முடித்த பின்னர் இந்த வசதியினை பெற முடியும்.
உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டண அமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த ரகுராம் ராஜன்,வாடிக்கையாளரின் அடையாளம், சரியான பரிவர்த்தனை போன்ற விஷயங்களின் பாதுகாப்பு குறித்து ஏற்படுத்தவிருக்கும் அமைப்பு பார்த்து கொள்ளும் என்று அவர் கூறினார்.
எங்கும் பரவியுள்ள வணிக தொடர்புகளினால் பண பரிவர்த்தனையை, வங்கி கணக்குகள் மூலமும், மொபைல் பாங்கிங் மூலம் சுலபமாக மேற்கொள்ள முடியும் எனில் பணம் அனுப்பும் முறையும் பணம் பெற்று கொள்ளும் முறையும் சாததியமாக்கப்படும் என்றும் ரகுராம்ராஜன் கூறினார்.
வங்கி சேவையை பெற முடியாத பெரும்பாலான மக்களை அதிக அளவில் கொண்டுள்ள நம் நாட்டில், பணம் அனுப்புவதற்கான சேவை வழங்கப்படுவது முக்கியமான ஒன்று.
மேலும் அவர் நிதி துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் தானியங்கி மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பண வரவு குறித்த தகவல்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், தனி நபரின் சேமிப்பு மற்றும் செலவு குறித்த தகவல்களை பராமரிப்பதில் தொழில் நுட்பம் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் கூறினார்

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats