தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தலில் போட்டியிடுவோர், 25 ஆயிரம் ரூபாய், டிபாசிட் கட்ட வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள், 12,500 ரூபாய் செலுத்தினால் போதும். வேட்புமனு தாக்கல் செய்யும்போதே, டிபாசிட் தொகை செலுத்த வேண்டும். செலுத்த தவறினால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும்.டிபாசிட் தொகையை திரும்பப் பெற, பதிவான ஓட்டுகளில், செல்லத்தக்க ஓட்டுகளில், ஆறில் ஒரு பங்கு வாங்க வேண்டும். 'நோட்டா' ஓட்டுகள், செல்லத்தக்க ஓட்டு கணக்கில் சேர்க்கப்படாது.அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டு, வெற்றி பெற்ற வேட்பாளர், ஆறில் ஒரு பங்கு ஓட்டு வாங்காவிட்டால், அவருக்கு மட்டும் டிபாசிட் தொகை வழங்கப்படும். பாரபட்சமின்றி, தேர்தல் விதிகள் பின்பற்றப்படுகின்றன, என்றார்.
No comments:
Post a Comment