Friday, 4 April 2014

தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

மக்களவைத் தேர்தலில் பணியாற்றும் பெண் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பெண் காவலர்களை நியமித்து போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசை வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற கூட்டணியின் மாநகரச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி நகர சரகத்திற்குள்பட்ட நிதியுதவி பெறும் பள்ளிகளுóக்கு 2007,08-ம் ஆண்டுகளுக்குரிய பள்ளி பராமரிப்பு மானியம் வழங்கப்படசவில்லை. இதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
85 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் ஜின்னா தெரு நகராட்சித் தொடக்கப்பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு கூட்டணியின் மாநகரத் தலைவர் ம. ஜேம்ஸ் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டச் செயலர் ஜோ. ஆல்பர்ட் தாஸ் முன்னிலை வகித்தார். மாநகரச் செயலரும்,மாநிலச் செயற்குழு உறுப்பினருமான சே. நீலகண்டன் சிறப்புரையாற்றினார்.
மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அமல் ஜேசுராஜ், பொறுப்பாளர்கள் சிராஜுதீன், ரெக்ஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். துணைச் செயலர் அ.பெர்ஜித்ராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats