Saturday, 5 April 2014

எஸ்எல்வி -சி24 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

ஆர்என்எஸ்எஸ்-1பி நேவிகேஷன் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் நேற்று  மாலை 5.14 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இந்த ராக்கெட் மொத்தம் 320 டன் எடையும், 44 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் இணைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோளின் எடை மட்டும் 1,432 கிலோ ஆகும். ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் மொத்த மதிப்பு ரூ.300 கோடி ஆகும்.
                            
மொத்தம் 4 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட், ஏவப்பட்ட சுமார் 20
நிமிஷங்களில் செயற்கைக்கோளை தாற்காலிகமான பாதையில் நிலைநிறுத்தும். இந்த தாற்காலிகமான புவிச்சுற்றுவட்ட மாற்றுப்பாதை பூமியிலிருந்து அருகில் 284 கிலோமீட்டரும், தொலைவில் 20,652 கிலோமீட்டரும் கொண்டது.

செயற்கைக்கோள் தாற்காலிகமான பாதையில் செலுத்தப்பட்டதும் பெங்களூருக்கு அருகில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின்(இஸ்ரோ) ஹாசன் கட்டுப்பாட்டு மையம் செயற்கைக்கோளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும். செயற்கைக்கோளிலேயே உள்ள திரவ எரிபொருள் என்ஜின் மூலம் ஐஆர்என்எஸ்எஸ்-1பி செயற்கைக்கோளின் பாதை அதிகரிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்டவுன் மிகவும் சீரான முறையில் நடைபெற்று, விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் எக்ஸைல் வகையைச் சேர்ந்தது என்பதால் 6 ஸ்ட்ராப்-ஆன் மோட்டார்களும் ராக்கெட்டின் பக்கவாட்டில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ இரவில் ஏவப்பட்டது. இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1பி செயற்கைக்கோள் மாலை நேரத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

பூமி சூரியனை எந்த இடத்தில் சுற்றி வருகிறது, இந்த செயற்கைக்கோளை எந்த இடத்தில் நிலைநிறுத்த வேண்டும் ஆகியவற்றின் அடிப்படையிலேயே செயற்கைக்கோள் செலுத்தும் நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்துக்கு உதவவும், இருப்பிடத்தை அறியவும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் போன்று இந்தியாவுக்கென பிரத்யேகமாக நேவிகேஷன் திட்டத்துக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகிறது.
ஐஆர்என்எஸ்எஸ்-1பி நேவிகேஷன் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் இன்று மாலை 5.14 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இந்த ராக்கெட் மொத்தம் 320 டன் எடையும், 44 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் இணைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோளின் எடை மட்டும் 1,432 கிலோ ஆகும். ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் மொத்த மதிப்பு ரூ.300 கோடி ஆகும்.

மொத்தம் 4 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட், ஏவப்பட்ட சுமார் 20 நிமிஷங்களில் செயற்கைக்கோளை தாற்காலிகமான பாதையில் நிலைநிறுத்தும். இந்த தாற்காலிகமான புவிச்சுற்றுவட்ட மாற்றுப்பாதை பூமியிலிருந்து அருகில் 284 கிலோமீட்டரும், தொலைவில் 20,652 கிலோமீட்டரும் கொண்டது.

செயற்கைக்கோள் தாற்காலிகமான பாதையில் செலுத்தப்பட்டதும் பெங்களூருக்கு அருகில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின்(இஸ்ரோ) ஹாசன் கட்டுப்பாட்டு மையம் செயற்கைக்கோளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும். செயற்கைக்கோளிலேயே உள்ள திரவ எரிபொருள் என்ஜின் மூலம் ஐஆர்என்எஸ்எஸ்-1பி செயற்கைக்கோளின் பாதை அதிகரிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்டவுன் மிகவும் சீரான முறையில் நடைபெற்று, விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் எக்ஸைல் வகையைச் சேர்ந்தது என்பதால் 6 ஸ்ட்ராப்-ஆன் மோட்டார்களும் ராக்கெட்டின் பக்கவாட்டில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ இரவில் ஏவப்பட்டது. இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1பி செயற்கைக்கோள் மாலை நேரத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

பூமி சூரியனை எந்த இடத்தில் சுற்றி வருகிறது, இந்த செயற்கைக்கோளை எந்த இடத்தில் நிலைநிறுத்த வேண்டும் ஆகியவற்றின் அடிப்படையிலேயே செயற்கைக்கோள் செலுத்தும் நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்துக்கு உதவவும், இருப்பிடத்தை அறியவும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் போன்று இந்தியாவுக்கென பிரத்யேகமாக நேவிகேஷன் திட்டத்துக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகிறது

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

web stats

web stats