சேலம் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதலாக வசூலிக்கப்படுவது தொடர்பாக மக்கள் நீதிமன்றம் முன் 13ம் தேதி ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள் ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சிவசுப்ரமணியம் சேலம் மாவட்ட இலவச சட்டப்பணிகள் குழு மற்றும் மக்கள் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், கடந்த 2001-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் தனியார்
பள்ளிகளின் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு சார்பில், ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள வசதிகள், ஆசிரியர்களின் திறன் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதை தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், சேலம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக வசூலித்து வருகிறார்கள்.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பாக கட்டண நிர்ணய குழுவினர் அனுமதித்துள்ள கட்டணம் பற்றிய விவரப்பட்டியலை வெளியிட வேண்டும். ஒவ்வொரு தனியார் பள்ளியின் வாசலிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விபரத்தை பட்டியலிட்டு வைக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து நடைமுறை படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாவட்ட இலவச சட்டப்பணிக்கள் குழு தலைவரும், மக்கள் நீதிமன்ற நீதிபதியுமான மணி வரும் 13ம்தேதி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment