5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Friday, 20 December 2013

GP 4200 இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு - நீதி மன்றத்தில் நடந்தது என்ன ? - Kipson Tata


இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013 17-12-2013. நீதி மன்றத்தில் நடந்தது என்ன ? 11-12-13 அன்று இரு தரப்பு வாதம் முடிந்ததால் 17-12-13 ன்று ஆணை பெற்றுக் கொள்ளுங்கள் என நீதியரசர் .திரு.சுப்பையா அவர்கள் அறிவித்திருந்தார் .அதனால் நமது மூத்த வழக்கறிஞர்
திரு.அஜ்மல்கான் அவர்கள் அஜர் ஆகவில்லை ,அவரது ஜூனியர் .திரு ,நம்பி ஆரோகன் அஜர் ஆகினர் ,அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் அஜர் ஆகினர். 17-12-13 அன்று கலை அட்மிசன் வழக்கு நடை பெற்றது 17-12-13 அன்று பிற்பகல் ஆணை வழங்கும் வழக்குகள் விசாரணைக்கு வந்தது .அதில் 9 வது வழக்கு நமது வழக்கு ஆகும் .அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் அஜர் ஆகி ஏற்கனவே வழங்கிய 3 நாள் அவகாசம் போதவில்லை . அரியர் ரூ .(2100 கோடி ) அரசு கணக்கு படி 5000 கோடி வருகிறது .மேலும் நிதி துறை செயலர் எழுத்து முலம் பதில் வழங்க 8 வாரம் அவகாசம் கேட்டார் . நீதியரசர் .திரு.சுப்பையா அவர்கள் 2 வாரம் அவகாசம் வழங்கி உள்ளார்..... நிதி துறை செயலர் எழுத்து முலம் பதில் வழங்கியதில் ஏதேனும் ஊதிய குழு அறிக்கை போல் தவறு இருந்தால் அதை நீக்கி நமக்கு சாதகமான தீர்ப்பு பெறலாம் எனவே 2வாரம் அவகாசம் வழங்கியது நல்லது தான் . என்றும் வெற்றி இடை நிலை ஆசிரியருடையதே ! ! ! இனி வரும் நாளில் நமது மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் அவர்கள் மட்டுமே அஜர் ஆவார்கள் .... மீண்டும் வழக்கு ஜனவரி மாதம் பொங்கலுக்கு முன்பாக விசாரணைக்கு வரும் ...

No comments:

Post a Comment


web stats

web stats