5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Saturday, 21 December 2013

வகுப்புகளை சரிவர எடுக்காத கணித ஆசிரியர் பணி இடைநீக்கம்


திட்டக்குடி அருகே, அரசுப் பள்ளி மாணவர்கள் கணிதத் தேர்வைப் புறக்கணித்த விவகாரத்தில், வகுப்புகளை சரிவர எடுக்காத கணித ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கோவிலூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. நடப்புக் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் 22 மாணவர்கள் பயில்கின்றனர். பிளஸ்-1 வகுப்புக்கு கணித பாடம் எடுப்பவர் முதுகலை கணித ஆசிரியர் வரதராஜ். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றலாகி வந்தார்.

இவர் பள்ளியில் சேர்ந்தது முதல் இதுவரை 10 நாள்கள் மட்டுமே மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளாராம். இதர நாள்கள் விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பிளஸ்-1 மாணவர்களுக்கு கணித பாடம் சரிவர நடத்தப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி நடந்த அரையாண்டு கணிதத் தேர்வை மாணவர்கள் புறக்கணித்து பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் வடிவேலு பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தி அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அளித்தார்.
இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் சி.ஜோசப் அந்தோணிராஜ் விசாரணை அறிக்கையை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகனுக்கு அனுப்பினார்.
இயக்குநர் உத்தரவின் பேரில் முதன்மைக் கல்வி அலுவலர், கணித ஆசிரியர் வரதராஜை தாற்காலிக பணிநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இதனையடுத்து அந்த பள்ளிக்கு புதிய கணித ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment


web stats

web stats