5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Friday, 20 December 2013

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துமாறு தேர்வுக்கு படித்து வரும் இளைஞர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துமாறு தேர்வுக்கு படித்து வரும் இளைஞர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
துணை ஆட்சியர் (ஆர்.டி.ஓ.), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய 8 வகையான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தேர்வை நடத்துகிறது.
இந்த தேர்வுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30. மற்ற அனைத்து வகுப்பினருக்கும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 தேர்வு குறித்த விழிப்புணர்வு கிராமப்புற மாணவர்களுக்கு தாமதமாக ஏற்படுவதாலும், ஐ.ஏ.எஸ். தேர்வு போன்று திட்டமிட்டபடி ஆண்டுதோறும் நடத்தப்படாததாலும் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக குரூப்-1 தேர்வு எழுதுவோர் கூட்டமைப்பு சார்பில் சுமதி, பிரியா, ரிச்சர்டு, ராமநாதன், அருள்மொழி ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: 
குரூப்-1 தேர்வு எழுதுவோரில் 50 சதவீதம் பேர் கிராமப்புற மாணவ-மாணவிகள்தான். தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு அதற்கு படித்து தயாராவதற்குள் வயதாகிவிடுகிறது. யு.பி.எஸ்.சி.யின் ஐ.ஏ.எஸ். தேர்வைப் போன்று குரூப்-1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது கிடையாது. கடந்த 13 ஆண்டுகளில் 5 தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு இருக்கின்றன.கேரளம், ஆந்திரம், குஜராத், அரியானா, பீகார் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் குருப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 45 ஆகும். தமிழ்நாட்டில்தான் பொதுப்பிரிவினருக்கு 30 என்றும் இதர பிரிவினருக்கு 35 என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. குரூப்-1 அறிவிப்பு தொடங்கி பணிநியமனம் வரை கிட்டதட்ட 3 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. எனவே, ஒரு வாய்ப்பை இழந்துவிட்டால் 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த காலகட்டத்தில்தான் பல இளைஞர்கள் வயது வரம்பை கடந்து விடுகின்றனர். 
வயது வரம்பு காரணமாக ஏறத்தாழ 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு வாய்ப்பு வழங்குவதால் அரசுக்கு எந்தவிதமான நிதிச்சுமையும் ஏற்படப்போவதில்லை. இந்தியாவிலேயே கல்வியறி வில் முதன்மை மாநிலமான கேரளத்தில் உச்சவரம்பு 45 ஆக இருக்கும்போது மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா, கருணை உள்ளத்தோடு தமிழகத்திலும் குரூப்-1 தேர்வு வயது வரம்பை உயர்த்தும்படி வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

No comments:

Post a Comment


web stats

web stats