5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Tuesday, 17 December 2013

நல்லாசிரியர் விருது கிடைக்க சில வழிமுறைகள் -

இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்தால் அவரை இழந்து விட்டாதீர்கள். அவரை பற்றி உங்கள் பிற மாணவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். பெற்றோர்களை அழைத்து சென்று பாராட்டுங்கள். தலைமையாசிரியர், அதிகாரிகளிடம் எடுத்து சொல்லுங்கள். அதுவே அவருக்கு கிடைக்கும் நல்லாசிரியர் விருது.

1. நீங்கள் வகுப்பறையில் கோபம் ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டாலும் , எல்லை மீறி கோபம் உண்டாக்கினாலும், உங்கள் மீது வன்முறையை உபயோகிக்காமல், அமைதியாய், அன்பால் உங்களை திருத்த முற்படுவார்.
2. உங்களின் மோசமான எழுத்துக்களை பார்த்து, கேலி பேசாமல், பிறரிடம் உங்களின் எழுத்துக்களை காட்டி எள்ளி நகையாடாமல், இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் அழகாக எழுதி விடலாம் என்று பாராட்டி, எவ்வாறு அழகாக எழுத வேண்டும் என்றும் எழுதி காட்டி நம்மை பழக்கப்படுத்துவார். நம்மை திருத்தி அழகாக எழுதச் செய்பவர்.
3. எப்படிப்பட்ட தருணத்திலும் உங்களை பிற மாணவனுடன் ஒப்பிட்டு பேச மாட்டார். பிற மாணவரை உதாரணம் காட்டி நம்மை சூடு ஏற்றி , வெறுப்பை உண்டாக்க மாட்டார். நம்மிடம் உள்ள தனித்திறமையை கண்டு பிடித்து பாராட்டுபவர்.
4. எல்லா தருணங்களிலும் சிரித்த முகத்துடன் நம்மிடம் உள்ள குறைகளை கூட நிறைகளாக காட்டி, நம்மை குறிக்கோளை நோக்கி செயல்பட வைப்பவர்.
5. உங்கள் முகத்தில் மாறுதல் ஏற்பட்டால், உங்கள் முகம் வாடியிருந்தால், அன்னையை போல அரவணைத்து நம் முக வாட்டத்தை போக்குபவர். ஆதரவாக பேசுபவர்.
6. உங்கள் பெற்றோரிடம் உங்கள் நிறைகளை பெறுமையாக பேசுவார். அதே நேரம் உங்கள் தவறுகளை நேரடியாக குறைகளாக கூறாமல், இவைகள்( குறைகளாக இருப்பவையெல்லாம்) இப்படி இருந்திருந்தால் முதல் மாணவனாக உருவாக வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டுபவர்.
7. பிற ஆசிரியர்கள் அடித்து அல்லது திட்டி நீங்கள் அழுவதைப் பார்த்தால், அவரும் அழுதுவிடுவார் அல்லது மனம் வருத்தப்படுவார். அடுத்த முறை அடித்த ஆசிரியர் பாராட்டும்படி நீ நன்றாக படிக்க வேண்டும் என்று உற்சாகமூட்டுபவர்.
8. மாணவர்களுக்கு மட்டுமல்லாது , பிற ஆசிரியர்களுக்கும் முன் உதாரணமாக செயல்படுபவர். நேர மேலாண்மையில் சரியாக பயன்படுத்தி, நேரம்தவறாமையை கடைப்பிடிப்பவர். நம்மையும் கடைபிடிக்க தூண்டுபவர்.
9. உங்களை மாணவனாக கருதி தள்ளி வைக்காமல் , நண்பனாக கருதி பழகுபவர் அதே நேரத்தில் நம்மை மரியாதையால், நம்மை ஆசிரியருக்குரிய மரியாதையுடன் நடக்க செய்பவர்.
10. பாட புத்தகங்களை திறக்காமல், துணைக்கருவிகளுடன் , மாணவர் மையப்படுத்தியதாக கற்பித்தல் பணிபுரிபவர். கதைகள் கூறி மாணவர்கள் இதயத்தை இடம்பிடிப்பவர்.
11. நீங்கள் அவருக்கு ஏற்றார் போல மாற வேண்டும் என கண்டிசன் போடமாட்டார். ஆனால் நாம் எதிர்பார்பது போல அவரே மாறி , நம்மில் ஒருவராக இருந்து நம் முன்னோற்றத்தில் உதவிபுரிபவர்.
12. நீங்கள் அவர் வகுப்பிலிருந்து மாறி சென்றாலும், நம்மீது அக்கறை மாறாமல் இருப்பவர். நம்மை பற்றி எப்போதும் விசாரித்து , நம் முன்னோற்றத்தில் அக்கறைக் கொள்பவர். தகுந்த ஆலோசனைகளைக் கூறுபவர்.

No comments:

Post a Comment


web stats

web stats