5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Thursday, 19 December 2013

புதிய பென்சன் திட்டம் ஆபத்தனாது’ நெ.இல.சீதரன் பேச்சு

புதிய பென்சன் திட்டத்தால் ஓய்வூதியர்களின் எதிர்காலம் எவ்வித உத்தரவாதமுமில்லாத ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும் என்றார் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன்.

அனைத்துத்துறை ஓய்வுதியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் ஓய்வூதியர் தின விழா புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.ஜெகநாதன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் எம்.முத்தையா வரவேற்றார். ‘மத்திய தண்ணீர் மசோதா’ என்ற தலைப்பில் பா.சுபா~;சந்திரபோஸ், ‘உணவுப் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் பி.ஆழ்வாரப்பன், ‘வன்முறை கலாச்சாரம்’ என்ற தலைப்பில் ஆர்.ராஜேந்திரசிங், ‘இன்றைய கிராமங்கள்’ என்ற தலைப்பில் என்.ராமச்சந்திரன், ‘புதிய மாதிரிப் பள்ளித்திட்டம்’ என்ற தலைப்பில் எஸ்.மத்தியாஸ், ‘புவி வெப்பமாதல்’ என்ற தலைப்பில் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றினர்.
விழாவில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.நாகராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன், அரசு சுகாதாரப் போக்குவரத்து ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் கே.நாகராஜன், அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ.மணவாளன், மாவட்ட கருவூல அலுவர்(பொ) பி.பழனியப்பன், பாரத வங்கி முதுநிலை மேலாளர் முத்துவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கலந்து கொண்டு சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய பென்சன் திட்டத்தால் ஓய்வூதியர்களின் எதிகாலம் கேள்விக்குறியதாக மாற்றப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களின் பணம் பங்குச் சந்தை சூதாட்டத்திற்கு திறந்துவிடப்பட உள்ளது. அதுவும் முத்தூட் போன்ற தனியார் வட்டிக்கடைகளை இச்சூதாட்டத்தில் இறக்கிவிட இருக்கிறார்கள். இதில் முறைகேடு நடந்தால் கிரிமினல் வழக்குத் தொடரமுடியாது.
ஓய்வூதியர்கள் வாங்கும் சம்பளத்தில் 50 சதத்திற்கும் குறையாமல் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டுமென நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் வாசுதேவ் ஆச்சார்யா குரல் எழுப்பினார்.
இதுகுறித்து ஆட்சியாளர்கள் வாய்திறக்கவில்லை. வருவாயில் 94 சதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது என திமுகவும், அதிமுகவும் மாறி, மாறிக் சொல்கிறது. ஆனால் அரசின் மொத்த வருவாயில் 1960-ம் ஆண்டு 2.7 சதமும், 2005-ல் 1.8 சதமும், 2008-ல் வெறும் 0.5 சதமுமாகத்தான் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது என பேசினார்.

No comments:

Post a Comment


web stats

web stats