5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Friday, 20 December 2013

நேரடியாக விண்ணப்பம் பெறக்கூடாது நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய குழு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்டம் தோறும் தேர்வுக்குழு அமைத்து வரும் 31ம் தேதிக்குள் தேர்வு செய்த ஆசிரியர் விபரங்களை அனுப்பி வைக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 2013ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் தேர்வு குழு அமைக்கப்படுகிறது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைவராகவும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், முதுகலை உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. 

இதனை போன்று உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மேல்நிலை பள்ளி முதுநிலை தலைமை ஆசிரியர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு அமைப்பது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘மாவட்ட தேர்வு குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் தூய்மையான கல்வி பணியாற்றுபவர்களாகவும், எந்தவித புகாருக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராக வும் இருத்தல் வேண்டும். விருதுக்கு தகுதியானவர் பணிபுரியும் பள்ளிகளை பார்வையிட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யவேண்டும். 

ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அலுவலர்கள் தாங்களே இனங்கண்டு உரிய கருத்துருக்களை தயார் செய்து பரிந்துரைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் இருந்து கருத்துருவை பெற்று பரிந்துரை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 2011-12ம் கல்வியாண்டில் அல்லது அதற்கு முன்பு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே 2013ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுடையவர்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats