5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Saturday, 21 December 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தேர்வு நடத்த உத்தரவு

 தமிழகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், தனித் தகுதி தேர்வு நடத்தி, பணி அமர்த்த, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட அரசாணையில், குறிப்பிடப்பட்டுள்ளவை: பி.எட்., படிப்பு முடித்து, வேலையில்லாமல் உள்ள, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எளிதில் வேலை கிடைக்க, டி.ஆர்.பி., மூலம், தனியாக சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தவும், பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் உருவாகும் காலிப் பணியிடங்களிலும், மாற்றுத் திறனாளிகளை பணியில் அமர்த்தவும், அனுமதி வழங்கப்படுகிறது. அதே போல், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, 32 மாவட்டங்களில் உள்ள, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம், சிறப்பு பயிற்சி வழங்கப்படும்; பார்வையற்றவர்களுக்கு, தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். முதுகலை பட்டம் பெற்ற, 200 பார்வையற்றவர்கள், தற்போதுள்ள பின்னடைவு காலியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலியிடங்களில், பணியமர்த்தப்படுவர். முதுகலை பட்டம் பெற்று, 'நெட், ஸ்லெட்' தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 100 பார்வையற்றவர்களை, கல்லூரிகளில் பின்னடைவு காலிப் பணியிடங்களிலும், இனிமேல் உருவாகும் காலியிடங்களிலும் உதவி பேராசிரியர்களாக பணியமர்த்த, டி.ஆர்.பி., மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம், 32 மாவட்டங்களில் உள்ள, 50 மையங்களில் பயிற்சி அளிக்க, மையம் ஒன்றுக்கு, 4 லட்சம் ரூபாய் வீதம், 2 கோடி ரூபாய், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats