5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Friday, 20 December 2013

விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு நடப்பதால் சர்ச்சை

அரசு, தனியார் பள்ளிகளில், விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகள், உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்படுகின்றன. இந்நிலையில், உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பல, மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தில் முனைப்பு காட்டுகின்றன.
இதனால், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, காலை, மாலை நேரங்களில் பள்ளி நேரம் தவிர்த்து, கூடுதல் நேரங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றன. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட அரசு விடுமுறை நாட்களில் கூட சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றன.
நேற்று முன்தினம் மாவட்டத்தில், உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையிலும் கூட, பல உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
"மாணவ, மாணவியர் மன உளைச்சலில் இருந்து விடுபட்டு, சற்று "ரிலாக்ஸ்" ஆக, இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஆசிரியர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அவ்வப்போது விடுமுறைகள் விடப்படுகின்றன. ஆனால், பல பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் "சிறப்பு வகுப்பு" நடப்பது வருத்தம் அளிக்கிறது" என பல ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கூறினர்.
இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரி பாலமுரளியிடம் கேட்ட போது, "விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது, பள்ளி நிர்வாகங்கள் எடுக்கும் முடிவு; பெற்றோரின் ஆட்சேபனையின்றி அவர்கள் சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றனர். இருப்பினும், இது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மழைக் காலங்களில், பாதுகாப்பு நடவடிக்கை கருதி, இத்தகைய சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது என்ற கண்டிப்பான அறிவுரையை பள்ளிகளுக்கு வழங்கியுள்ளோம்" என்றார்.

No comments:

Post a Comment


web stats

web stats