5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Monday, 16 December 2013

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம்: பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் அமைக்க ரூ.104 கோடி ஒதுக்கீடு


அனைவருக்கும் இடைநிலைக் கல்வி தி்ட்டம் மூலம் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் அமைப்பதற்கு ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
தமிழகம் முழுவதும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில் பள்ளிகளில், ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளால் தகவல் திரட்டும் படிவம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில், குறிப்பிட்ட ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகள் அதிகமாக இருந்த நிலையில் நெருக்கடியாக அமர்ந்திருப்பதும், வகுப்பறைகள் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் எந்தெந்த பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆயுவுக் கூடம் தேவைப்படுகிறது. இதுபோன்றவைகளை ஆய்வு செய்து அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மாநிலம் முழுவதும் ரூ.104 கோடியில் 1425 வகுப்பறைகள் அமைப்பதற்கும், 472 ஆய்வுக் கூடம் கட்டவும் ரூ.42.52 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18 பள்ளிகளுக்கு, மொத்தம் 38 கூடுதல் வகுப்பறைகள் அமைக்க தலா ரூ.8.37 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 16 பள்ளிகளில் தலா ரூ.9.01 லட்சத்தில் அறிவியல் ஆய்வுக் கூடமும் அமைப்பதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் பொதுப்பணித்துறை மூலம் அடுத்தமாதம் முதல் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருப்பதாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அலுவலர் அதியமான் தெரிவித்தார்.

No comments:

Post a Comment


web stats

web stats