தமிழகத்தில் 81 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
போட்டித் தேர்வு இல்லாமல், அதேநேரத்தில் பதிவு மூப்பும் இல்லாமல் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய அரசு முடிவு செய்தது.
அதன்படி, பணி அனுபவம், உயர்கல்வித் தகுதி,நேர்முகத் தேர்வு ஆகியவற்றுக்கு குறிப் பிட்ட மதிப்பெண் அளித்து அதன் அடிப்படையில் தேர்வு நடக்க வுள்ளது. இந்தப் பணிக்கு சுமார் 15 ஆயிரம் பேர்விண்ணப்பித்திருந்தனர். அவர்க ளுக்கு நவம்பர் இறுதியில் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.அப்போது சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு பணி அனுபவம், உயர்கல்வித் தகுதி ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.இதற்கான பணி கள் வேகமாக நடந்து வருகின்றன.பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாகசம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப் படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. முடித்திருந்தால் ஸ்லெட், நெட் தகுதித்தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இதற்கான விதியின்படி, குறிப்பிட்ட பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை தமிழ் வழியில் பெற்றிருக்க வேண்டும். அதன்படி, உதவிப் பேராசிரியர் பணிக்கான கல்வித் தகுதியான முதுகலை பட்டம், ஸ்லெட் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி, பி.எச்டி. ஆகிய வற்றை தமிழ் வழியில் முடித்திருக்க வேண்டும்.மாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் தேர்வும், தேசிய அளவி லான நெட் தகுதித் தேர்வும் தமிழ்ப் பாடம் நீங்கலாக மற்ற அனைத்து பாடங்களுக்கும் ஆங்கில வழியில்தான் நடத்தப்படுகின்றன. பி.எச்டி. பட்டத்துக்கான ஆய்வும் ஆங்கில வழியில்தான் சமர்ப்பிக் கப்படுகின்றன. எனவே, தமிழ் வழி ஒதுக்கீட் டுக்கு தகுதியை நிர்ண யிப்பதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது.இதுதொடர்பாக உயர்கல்வித் துறையிடம் உரிய விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஆசி ரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏற்கெனவே, அஞ்சல்வழி எம்பில். பட்டத்தை ஏற்றுக் கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டு, அது ஒருவழி யாக முடிவுக்கு வந்தது.தற்போது தமிழ்வழிக் கல்வி ஒதுக்கீட்டில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment