பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில், சத்துணவு சாப்பிட்டும் எடை குறைவாக உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு பர்பி, உளுந்து பர்பி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளுக்கு சத்துணவு தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 67 லட்சத்திற்கும் மேலான குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தினமும் சூடாக சமைத்த அரிசி சாதத்துடன், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டையுடன் சத்துணவு கொடுக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமைகளில், வேகவைத்த கறுப்பு கொண்டைக் கடலை, பச்சை பயறும், வெள்ளிக்கிழமைகளில் வேகவைத்த உருளைக்கிழங்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. வாரத்தில் 5 வேலை நாட்களிலும், முட்டை, முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கப்படுகிறது. கலவை சாதங்கள்கடந்த 30 ஆண்டுகளாக ஒரே வகையான உணவு வழங்கப்படுவதால், குழந்தைகள் சலிப்படைந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு புதிய வகையிலான, விதவிதமான கலவை சாதம், மசாலா முட்டை தினமும் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பரீட்சார்த்தமாக, அனைத்து மாவட்டங்களிலும், ஒரு வட்டாரத்தில் உள்ள சில பள்ளிக்கூடங்களில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பரிசீலனை செய்து வருகிறார். குழந்தைகள் எடை குறைவுஏற்கனவே, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எடையை அவ்வப்போது சரி பார்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவின் பேரில், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அதன்படி, தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் உள்ள குழந்தைகள் எடை பார்க்கப்பட்டனர். அப்போது, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளில் படிக்கும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள், எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடலை மிட்டாய்முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இதுபோன்ற எடை குறைவான குழந்தைகளுக்கு புரதச்சத்து அதிகம் உள்ள உணவு வழங்க வேண்டும் என்றும், குறைந்த பட்சம் 250 கலோரி அளவு சத்து நிறைந்ததாக அது இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதன்பாடி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு பர்பி, உளுந்து பர்பி ஆகியவை ஒவ்வொரு நாளும் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் அடுத்த சில நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அங்கன்வாடி மையங்களில் இந்த பர்பி வழங்கப்படும். இதுகுறித்து அங்கன்வாடி அமைப்பாளர் ஒருவர் கூறியதாவது:- முதல்-அமைச்சருக்கு பாராட்டுமுதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், அமைச்சர் பா.வளர்மதி, அதிகாரிகளுடன் அங்கன்வாடி மையங்களுக்கு வந்து அடிக்கடி ஆய்வு நடத்துகிறார். அதை முதல்-அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்து செல்கிறார். அந்த வகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த திட்டம்தான் குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு பர்பி, உளுந்து பர்பி வழங்கும் திட்டமாகும். இது குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment