Sunday, 15 September 2013

தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் தொடர்ந்து மூடல்: பள்ளிகள் எண்ணிக்கை 700ல் இருந்து 453 ஆக சரிந்தது

மாணவ, மாணவியர் இல்லாததால், தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்படுவது, தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், 700 ஆக இருந்த, தனியார் பள்ளிகள் எண்ணிக்கை, தற்போது, 453 ஆக சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 20 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இடைநிலை ஆசிரியர்கள்:

இரு ஆண்டுகள், ஆசிரியர் பயிற்சி முடிப்பவர்கள், ஆரம்ப பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் தகுதியை பெறுகின்றனர். தற்போது, அரசு ஆரம்ப பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் நியமனம், அதிகளவில் நடப்பது இல்லை. 1,000, 1,500 என்ற அளவில் தான், நியமன எண்ணிக்கை உள்ளது.அதுவும், மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் தான், நியமனம் செய்யப்படுகின்றனர். தற்போது, டி.இ.டி., தேர்விலும், தேர்ச்சி பெற வேண்டும் என்ற, கூடுதல் பளு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆசிரியர் பயிற்சியில் சேர்வதை, மாணவர், சுத்தமாக தவிர்க்கின்றனர்.மாநிலம் முழுவதும், 37 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்
இயங்கி வருகின்றன. இவற்றில், நடப்பாண்டில், 2,300 மாணவர், முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர். தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், வெறும், 5,900 மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

பயிற்சி பள்ளிகள்:

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், 700 ஆக இருந்த தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் எண்ணிக்கை, தற்போது, 453 ஆக சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 20 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.மாணவ, மாணவியர்இல்லாததால், பள்ளிக்காக, டெபாசிட் செய்த, 5 லட்சம் ரூபாயை எடுத்து, செலவுகளுக்கு பயன்படுத்தலாம் என்று எண்ணி, பலரும், பள்ளியை மூட விருப்பம் தெரிவித்து, பெங்களூருவில் உள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடம் விண்ணப்பித்து வருவதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது:தற்போதைய நிலை, தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், 30 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மட்டும் போதும். தனியார் பள்ளிகளே
Advertisement
தேவை இருக்காது. எனவே, வரவேற்பு இல்லாத அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்படும். ஏற்கனவே, சென்னை, தாயார் சாகிப் தெருவில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இயங்கவில்லை.

மூட நடவடிக்கை:

இந்த பள்ளிக்கு, ஒரு மாணவர் கூட வரவில்லை. இந்நிலை, வரும் ஆண்டிலும் நீடித்தால், மூடப்படும். இப்படி, மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை,தொடர்ந்து மூட, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.தற்போது, படிக்கும் மாணவர்கள், தனியார் பள்ளிகளில், வேலை வாய்ப்புகளை பெறலாம். அதற்கு, போதிய ஆங்கில உரையாடல் திறன் தேவைப்படுகிறது.
அதற்காக, முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, வாரத்திற்கு, குறைந்தது, மூன்று வகுப்புகள், ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சியை, அடிப்படையில் இருந்து அளிக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டு உள்ளோம்.பயிற்சியை முடிக்கும்போது, ஆங்கிலத்தில் பேசக்கூடிய, எழுதக்கூடிய நம்பிக்கையை, மாணவர்கள் பெற வேண்டும். அதற்கேற்ப, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats